தளபதி69 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் கோலிவுட் இளம் நடிகர்?… நடக்குமா? பக்காவா இருக்குமே!...
Thalapathy69: விஜய் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் தளபதி 69 படத்தின் இயக்குனர் குறித்த ஆசிரியர் தகவல்கள் தற்போது கோலிவுட் வட்டாரத்திலிருந்து வெளியாகி இருக்கிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் பலர் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மிகப்பெரிய அளவில் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் விஎஃப்எக்ஸ் வேலைகள் தொடங்கப்பட இருக்கிறதாம்.
இதையும் படிங்க: அய்யா, ஏற்கனவே அவர் பல்ப் தான் வாங்கிட்டு இருக்காரு.. அடுத்த ஆட்டை ரெடி செய்த அனிமல் இயக்குனர்..
பெரும்பாலும் ஒரு படத்தின் பாதி வேலைகள் முடியும் நிலையிலே விஜயின் அடுத்த இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகிவிடும். ஆனால் கோட் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் கூட இன்னமும் அடுத்த இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முதலில் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகிறார் என அறிவிப்புகள் வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த லிஸ்டில் வெற்றிமாறன், திரிவிக்ரம், அட்லீ என பல இயக்குனர்கள் இணைந்தனர். இதில் வெற்றிமாறன் மற்றும் திரிவிக்ரம் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது அந்த லிஸ்டில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது. ஆர்ஜேவாக இருந்து தற்போது கோலிவுட்டில் நடிகராக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. எல்கேஜி திரைப்படத்தின் மூலம் நடிகராக கோலிவுட்டில் எண்ட்ரி ஆனார். முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய வசூலை பெறவில்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது ஃபுல் மீல்ஸ் விருந்து போல!.. டிரிபிள் எக்ஸ் சைஸ் காட்டி இழுக்கும் ரேஷ்மா!..
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய ஆர்.ஜே பாலாஜி, நான் விஜய் சாரை பார்த்து 40 நிமிடம் ஒரு கதையை சொல்லி இருந்தேன். அது அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. மார்ச்சில் பண்ணலாமா என கேட்டிருந்தார். நான் அடுத்த மார்ச் தானே செய்து விடலாம் என்றேன். அப்போ வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அடுத்து லோகேஷ் படத்தை முடித்துவிட்டு இதை பண்ணுவார் என நினைத்தேன்.
ஆனால் விஜய் சார் 2023 மார்ச் இதை செய்யலாமா எனக் கேட்டார். நானோ இப்பொழுதுதான் என்னுடைய வீட்ல விசேஷங்க படத்தின் கதை எழுதவே இரண்டு மாதம் எடுத்துக்கொண்டேன். இது சொந்த கதை வேற? கொஞ்சம் டைம் எடுத்து முடிக்க வேண்டும் என்றேன். வேறு கதை இருக்கா என்றார்.
இல்லை சார், இதுவே செய்கிறேன். அவசரம் இல்லை. முழுதும் முடித்துவிடுகிறேன் எனவும் கூறினேன் எனவும் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். தற்போது வைரலாகும் இந்த வீடியோவை வைத்து பார்க்கும் போது தளபதி 69 படத்தின் இயக்குனர் பட்டியலில் ஆர்.ஜே பாலாஜி முக்கிய இடத்தை பிடித்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரசிகர்களும் அந்த அறிவிப்புக்கு ஆவலாக காத்திருக்கின்றனர் எனவும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படத்தில் நடிப்பவர்கள் என்ன கொத்தடிமைகளா? தாங்கமுடியாத பாலாவின் அடாவடிகள்.. இவ்ளோ பேரா?