என்னடா யாத்திசை படத்தை எடுத்து வச்சிருக்கீங்க!.. தங்கலான் டீசர் எப்படி இருக்கு?.. சியான் தப்பிப்பாரா?..
ஆதித்த கரிகாலனை டிரெஸ்ஸெல்லாம் கழட்டி யாத்திசை படத்தில் நடிக்க வச்சது போல தங்கலான் படத்தின் டீசர் இருக்கிறது. தூள் படத்தில் இதைத்தான் நைட் ஃபுல்லா ஒட்டிக்கிட்டு இருந்தியா என அந்த பாட்டி எட்டி உதைக்குமே அப்படி ஒரு லோ பட்ஜெட் மேக்கிங்காக பா. ரஞ்சித் தங்கலான் படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.
ஒரே ஒரு ஏரியில் ஒட்டுமொத்த தங்கலான் படத்தின் ஷூட்டிங்கையும் பா. ரஞ்சித் முடிச்சிட்டாரா? என்றும் சியான் விக்ரமின் அற்புதமான உடல் உழைப்பு மட்டும் தான் டீசரில் ரசிக்கும் படியாக இருக்கிறது. பார்வதியை சரியாக காட்டவில்லை. மாளவிகா மோகனன் சீன் ஓவர் ரியாக்ஷனாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: உலகநாயகனுக்கே இப்படி ஒரு குழப்பமா.. வேற ஒருவரை இளையராஜாவாக நினைத்த கமல்ஹாசன்..!
பசுபதியும் எக்ஸ்ப்ளோர் ஆகவில்லை என்றே தங்கலான் படத்தின் டீசரை பார்க்கும் போது புதிய படத்தை பார்க்கப் போகிறோம் என்கிற எந்தவொரு உணர்வும் வராமல் அப்போகலிப்டோ மற்றும் யாத்திசை படங்களின் வாடை தான் அப்படியே அடிக்கிறது.
சியான் விக்ரம் அந்த ராஜ நாகத்தை கழுத்தை திரிகி போடும் காட்சிக்கு பதில் நாகத்தை பாதுகாப்பாக காட்டுப் பகுதியில் விடுவது போன்று காட்டிருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.
இதையும் படிங்க: தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!.. அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..
பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் பட்ஜெட்டே இல்லாமல் சண்டைக் காட்சிகள் ஒளிப்பதிவு செய்த அதே எஃபெக்ட் தான் தங்கலான் படத்திலும் தெரிகிறது.
ஆனால், அனைத்தையும் மீறி டீசரை பல முறை பார்க்க வைக்க ஒரே காரணம் சியான் விக்ரம் நடிப்பு மட்டும் தான். அதிலும் இடுப்பை ஆட்டிக் கொண்டு ஒரு தெனாவட்டாக அவர் நடந்து வரும் அந்த நடையழகே தனி தான். ஜனவர் 26ம் தேதி வெளியாகும் படத்தில் பல அரசியல்களையும் கதையையும் தங்க சுரங்கத்தை சுற்றி வைத்து பா. ரஞ்சித் அசத்தி இருந்தால் படம் வேறலெவல் ஹிட் அடிக்கும் இல்லையென்றால் மீண்டும் சியான் நடிப்பை மட்டுமே பாராட்டி விட்டு படம் சொதப்பல் என சொல்லும் நிலைமைதான் உருவாகும் என தெரிகிறது.