அந்த விஷயத்தை செய்யப் போறேன்!.. யாராவது வந்து கையை புடிச்சிக்கிறீங்களா.. மாளவிகா மோகனனா இப்படி சொல்றாரு?

அந்த விஷயத்தை செய்யப் போறேன்!.. யாராவது வந்து கையை புடிச்சிக்கிறீங்களா.. மாளவிகா மோகனனா இப்படி சொல்றாரு?
நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் எல்லாம் கற்றுக் கொண்ட பவர்ஃபுல் லேடியாக இருந்தாலும் இந்தவொரு விஷயத்துல செம வீக்காம். ரொம்ப பயமா இருக்கு, யாராவது வந்து என் கையை புடிச்சிக்கோங்க என அவர் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் “நான் ரெடி தான் வரவா” என லியோ பட பாடல் வரிகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அமீர் அவ்வளவு சொல்லியும் கேட்காத சரவணன்!.. வீணா வாழ்க்கையை கெடுத்துக்கிட்டாரே!..
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஹனி ரோஸுக்கு பாலய்யா படத்தில் அம்மா வேடம் கொடுத்தது போல அந்த படத்தில் மாளவிகா மோகனனை வேஸ்ட் செய்திருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.
ஆனால், அடுத்து மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனை அழகாக காட்டி இங்கேயும் அவருக்கு மலையாளத்தில் போலவே ரசிகர்களை அதிகரிக்க லோகேஷ் கனகராஜும் அனிருத் இசையில் யுவன் பாடிய அந்த கண்ண பார்த்தாக்கா பாடலும் ரொம்பவே உதவியது.
இதையும் படிங்க: செதுக்கி வச்ச சிலை போல கும்முன்னு இருக்க!.. ஜொள்ளுவிட வைக்கும் யாஷிகா ஆனந்த்.
அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படம் மாளவிகா மோகனனே வாழ்வில் மறக்க நினைக்கும் படமாக ஓடிடியில் வெளியாகி ஓடாமல் போனது.
இந்நிலையில், வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் தங்கலான் படத்தில் தரமான கதாபாத்திரத்தில் காட்டுவாசி பெண் போல நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாகவும், சினிமாவில் தனக்கு ரொம்பவே டஃப்பான வேலை டப்பிங் தான் என்றும் அதற்காக செல்கிறேன் ரொம்ப பயமா இருக்கு யாராவது கையை பிடித்துக் கொள்ள வரீங்களான்னு தங்கலான் தங்கம் கேட்டுள்ளார்.