கமல் பண்ண தப்பை கரெக்ட் பண்ணும் தாணு!.. ரீ ரிலீஸில் கல்லா கட்டுமா ஆளவந்தான்?!..

Published on: December 6, 2023
alavandhan
---Advertisement---

கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இரட்டை வேடத்தில் நடித்து 2001ம் வருடம் வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவராமல் வெற்றியைடந்தது. கவராமல் என்று சொல்வதை விட பலராலும் இப்படம் புரிந்து கொள்ளமுடியாமல் போனது என்றும் சொல்லலாம்.

பல வருடங்களுக்கு முன்பே ஒரு வார பாத்திரிக்கையில் கமல் எழுதிய தொடர்தான் இது. இதைத்தான் அவர் சினிமாவாக மாற்றினார். கலைப்புலி தாணு தயாரிக்க பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கினார். ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, அனு ஹாசன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: கழட்டிவிட்ட கமல்!. ஹிட் படத்தின் பார்ட் டூ எடுக்க போகும் ஹெச்.வினோத்?!. ஹீரோ அவரா?!.

அதிக பொருட்செலவில் இப்படம் உருவானது. சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகவும் செலவானது. கதை மற்றும் கமல் மீது இருந்த நம்பிக்கையில் தாணுவும் அதை ஏற்றுக்கொண்டார்., ஆனால், படம் பிளாப் ஆகிவிட்டதால் கலைப்புலி தாணு நஷ்டமடைந்தார். எனவே, ‘ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்’ என பேட்டியெல்லாம் கொடுத்தார்.

இதில் கடுப்பான கமல் அதன்பின் கலைப்புலி தாணுவுக்கு கால்ஷீட் கொடுக்கவே இல்லை. இப்போது இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யும் வேலையில் தாணு இறங்கியிருக்கிறார். வருகிற 8ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் நந்து கதாபாத்திரம் ஏன் அப்படி ஆனது என்பதற்கு பெரிய பிளாஷ்பேக்கை கமல் வைத்திருந்தார்.

alavandhan

அதுதான் ரசிகர்களை அயற்சி அடைய வைத்தது. அப்படத்தின் தோல்விக்க்கு அதுவே முக்கிய காரணமாக அமைந்தது. இப்போது ஒரு அரை மணி காட்சிகளை வெட்டிவிட்டு புதிய தொழில்நுட்பத்துடன் படத்தை வெளியிடுகிறார் தாணு. சுமார் ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக தாணு உருவாக்கிய புதிய டிரெய்லர் வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இந்த முறை ஆளவந்தான் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கிண்டலடித்த சினிமா உலகம்!.. அவமானத்தை தாண்டி ‘அப்பு’வாக சாதித்து காட்டிய கமல்..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.