Categories: Cinema News latest news

நான் பண்ண அந்த ஒரு தப்பு!.. கல்யாணமும் ஆகல!.. வாழ்க்கையும் வீணாப்போச்சி.. கதறும் கிரண்

நடிகை கிரண் ரதோட், ஒரு காலத்தில் தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். ஆனால் திடீரென ஆவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். பல ஆண்டு காலமாக தலைகாட்டாமல் இருந்த கிரண், திடீரென இன்ஸ்டாகிராமில் நுழைந்து, படு கவர்ச்சியாக ஃபோட்டோக்களை போட தொங்கினார். அடிக்கடி ஃபோட்டுகளை பகிர்ந்து, மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறினார்.

இதையும் படிங்க- கமல், இளையராஜா சொல்லியும் நடிகையிடம் டெரர் காட்டிய பாலா!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் தான் வீணாகிவிட்டது என்று பேசியுள்ளார். அந்த பேட்டியில், எனக்கு திருமணம் ஆகவில்லை. நான் தனியாக தான் வாழ்ந்து வருகிறேன்.  பல படங்களில் நடித்துகொண்டிருந்தேன். அந்த சமயத்தில், நான் ஒரு தவறான நபரை காதலித்தேன்.

அதனால், பல படங்களின் வாய்ப்பை இழந்தேன். நான் மிகவும் எமோஷனலான நபர். காதலில் மட்டுமே கவனம் செலுத்தி, பல பட வாய்ப்புகளை தவறவிட்டேன். காதல், கல்யாணம் என வாழ ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன் பின்னர், தான் அந்த நபரின் உண்மை முகம் தெரிந்தது. காதல் தோல்வியில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன்.

அதன் பின்னர் எனக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை. அந்த நபரை மட்டும் நான் காதலிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம், மிகப்பெரிய ஹீரோயின் ஆகியிருப்பேன். பைத்தியக்காரத்தனமாக நான் செய்த தவறு தான் காதல், அதனால் தான் என் வாழ்க்கையே தலைகீழாக மாறி நாசமாகிவிட்டது.

இப்போதும் நான் தமிழ் படங்களில் நடிக்க ஆசை படுகிறேன். வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக நடிப்பேன் என்று நடிகை கிரண் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- கடைசியில் அந்த தொழிலுக்குச் சென்ற கிரண் ரத்தோட்!.. பயில்வான் ரங்கநாதனின் பகிர் தகவல்!..

Published by
prabhanjani