தனுஷின் கண்களைப் பார்த்ததும் நடிக்க முடியாமல் திணறிய நடிகர்... அப்படி என்னதான் நடந்தது?

by sankaran v |
Asuran
X

Asuran

பாலுமகேந்திராவிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்து வந்தவர் வெற்றி மாறன். அவருக்கு அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்தவர் ஆடுகளம் நரேன். இவர் தனது சினிமா உலக அனுபவங்களை சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"நானும், வெற்றிமாறனும் விடிய விடிய எல்லாம் பிளாட்பார்ம்ல உட்கார்ந்து பேசுவோம். சினிமாவைப் பத்தித்தான் பேசுவோம். அப்போது இருந்தே ஆழமான நட்பு இருந்தது" என்கிறார் ஆடுகளம் நரேன். பொல்லாதவன் தான் வெற்றி மாறன் இயக்கிய முதல் படம்.

இதையும் படிங்க... ரஜினிகாந்துக்கே இந்த நிலைமையா!.. ’கூலி’ படத்தை ஆரம்பத்திலேயே காலி பண்ண முடிவெடுத்த இளையராஜா?..

அந்தப் படத்தில் உதவி இயக்குனர் ஆடுகளம் நரேன். இந்தப் படத்தில் ரொம்பவே ஆர்வத்துடன் வேலை செய்தாராம். அவரு தான் அந்தப் படத்தில் முதலாவதாக கிஷோர் ரோல் பண்ண வேண்டியதாக இருந்ததாம். அப்புறம் அதெல்லாம் வேணாம்னு சொல்லி அசிஸ்டண்ட் டைரக்டராக ஒர்க் பண்ணினாராம் ஆடுகளம் நரேன்.

அதே போல படத்தில் நீளமாக இருந்த போரடிக்கக்கூடிய பல காட்சிகளைக் கட் பண்ணச் செய்தாராம். படம் ரிலீஸானதும் அன்று முதல் காட்சியைப் பார்த்த உடன் பாராட்டு தெரிவித்து போன் வந்து கொண்டே இருந்ததாம். அப்போது தான் வெற்றி மாறனிடம் நமக்கு வெற்றி தான் என்று சொல்லி பெருமிதம் அடைந்தாராம். அந்தத் தருணங்களை மறக்கவே முடியாது என்கிறார்.

தனுஷ் மிகச்சிறந்த நடிகர். அவர் நடிப்பைப் பார்த்து ரொம்ப வியந்து இருக்கேன். ஆளுமைத்திறன் படைத்தவர். சாப்பிடுறது, அயர்ன் பண்றது என சாதாரண சீனில் கூட நல்ல பர்பார்மன்ஸ் பண்ணிருப்பார். லாஸ்ட் பைட்ல சிக்ஸ் பேக் கிளாப்ஸ் வரும்னு சொன்னேன். அதே மாதிரி வந்தது. எப்பவுமே வியக்கிற மனிதர்.

A Naren, Dhanush

A Naren, Dhanush

அசுரன் படத்துல முதல் ஷாட் பஞ்சாயத்து சீன். அவரை உதாசீனப்படுத்துற மாதிரி துப்பிட்டு சொம்பை எடுத்துத் தண்ணியைக் குடிச்சிட்டுப் பேசணும். அவரு துண்டை வச்சிக்கிட்டு பரிதாபமா நின்னுக்கிட்டு ஒரு பார்வையைப் பார்ப்பாரு. "கட் கட் கட்"னு சொன்னேன். "ஏன் என்னாச்சு?"ன்னு கேட்டாங்க. "சார் நான் டயலாக் ஸ்டார்ட் பண்ண உடனே பாருங்க. முதல்லயே பார்க்காதீங்க"ன்னு சொன்னேன். திரும்ப எப்படி சார் இருக்கீங்கன்னு கேட்டேன். ரொம்ப ஒரு மாதிரியா இருந்தாரு.

உடனே அவர் "சார் தப்பா நினைக்காதீங்க... நான் கேரக்டராவே மாறிட்டேன்"னு சொன்னார் தனுஷ். அப்புறம் ஒன்மோர் கேட்டு நடிச்சேன். "என்ன சார் ஆச்சு?"ன்னு டைரக்டர் கேட்டாரு. "இல்ல சார் இவரு கண்ணைப் பார்த்த உடனே எனக்குப் பேச வரல"ன்னு சொன்னேன். "நீங்களும் நடிக்க வந்துட்டீங்க பாருங்க"ன்னு கலாய்த்தார். "என்ன பண்றதுப்பா நீங்க இவ்ளோ தூரம் பழகிட்டீங்க. நான் இன்னிக்கு தான நடிக்க வந்துருக்கேன்"னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story