அஜித் - ஆதிக் இணையும் படத்திற்கு வில்லனை செலக்ட் செய்த படக்குழு! போரடிக்காம இருந்தா சரி

ajith
Ajith Aadhik: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். தேர்தல் முடிந்த பிறகு விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள். படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே படத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இந்த படம் எப்பவே முடிந்து ரிலீஸ் ஆக வேண்டியது. கிட்டத்தட்ட ஒருவருடத்தை கடந்தும் இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் இணைய இருக்கிறார். அந்தப் படத்திற்கான பூஜைகள் போடப்பட்டு ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். அதற்குள் விடாமுயற்சி படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருக்கிறார்கள்.

diyol
இதையும் படிங்க: இரண்டு ரூபாயிற்கு மேல் பணம் இல்லாமல் போலீஸில் இருந்து தப்பித்து ஓடிய ரஜினிகாந்த்… சுவாரஸ்ய சம்பவம்!
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெரிய நடிகர்களை தேடிவருவதாக கூறப்பட்டது. இதில் அனிமல் பட வில்லனான பாபி தியோலை கமிட் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பாபி தியோல் கங்குவா திரைப்படத்திலும் நடித்துவருகிறார். ஏற்கனவே வில்லன் நடிகரான ஜகபதி பாபுவை அடிக்கடி திரையில் பார்த்து ரசிகர்களுக்கு போரடித்து விட்டது.
அதனால் பாபி தியோலையும் பார்த்து போரடிக்காமல் இருந்தால் சரி என்றும் அதனால் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜான் ஆபிரகாமை வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போகவே குட் பேட் அக்லி படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

john
இதையும் படிங்க: மாட்டிக்கினாரு யுவனு! கடைசில இந்த பாடலின் காப்பிதானா ‘விசில போடு’ பாடல்.. கலாய்க்கும் ரசிகர்கள்