அஜித் சிகிச்சையில் இவ்ளோ ரிஸ்க்கா? இல்லைனா அந்தப் பிரபலத்துக்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்

Published on: March 10, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். சில தினங்களாக அஜித்தின் உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதாவது அவருக்கு காது மூளை வழியே செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து மருத்தவர்கள் அகற்றினர்.

ஆனால் இதை சமூக வலைதளங்கள் பெரிதுபடுத்தி அஜித்துக்கு மூலையில் கட்டி இருந்ததாகவும் ஐசியூவில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இப்படியெல்லாம் காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. தாராள கவர்ச்சியில் தவிக்கவிட்ட ரேஷ்மா!..

ஆனால் அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து ஒரு நாள் முழுவதும் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பி உள்ளார். அது மட்டுமல்லாமல் நேற்று அவர் தன் மகனின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தனர்.

அதைப் பார்த்ததும் ரசிகர்கள் தன்னம்பிக்கைக்கு பேர் போன தல அஜித் என்ற ஹேஸ் டேக்கை பதிவு செய்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வந்தார்கள். இதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறிய வலைப்பேச்சு அந்தணன் அஜித் சரியான நேரத்தில் அந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டது தான் அவர் செய்த முதல் நல்ல விஷயம் எனக் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த தளபதி இவர்தான்!. நமக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!.. புது பட ஹீரோவை கலாய்த்த வெங்கட்பிரபு..

ஏனெனில் இதே மாதிரியான ஒரு பிரச்சனை தான் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஆன பாரதி பாஸ்கருக்கும் ஏற்பட்டதாம். திடீரென பாரதி பாஸ்கர் மயக்கம் போட்டு விழ அவருடைய கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது அஜித்துக்கு இருந்த பிரச்சினை தான் அவருக்கும் இருந்ததாம்.

ஆனால் பாரதி பாஸ்கருக்கு அந்த வீக்கம் அதிகமாக இருந்ததனால் மூளையில் ஆப்ரேஷன் செய்தார்களாம். அதன் பிறகு அவர் முழு ஓய்வில் இருந்ததாகவும் நீண்ட காலம் சில பல பயிற்சிகளை மேற்கொண்டு அதன் பிறகே அவர் பழைய நிலைமைக்கு வந்ததாகவும் அந்தணன் கூறினார். நல்ல வேளையாக அஜித் முன்னதாகவே இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டார் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: வீட்டு வேலைக்காரர்களை கேவலமாக நடத்துகிறாரா ரஜினி? பிரபலம் கொடுத்த ‘நச்’ பதில்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.