கவுண்டமணியுடன் 35 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றும் இயக்குனர்... அட இவரா?
தமிழ்சினிமா உலகில் காமெடி இரட்டையர்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில் தான். ஒருவர் அடி வாங்கியே சிரிக்க வைப்பார். ஒருவர் அடி கொடுத்தும், திட்டியும் சிரிக்க வைப்பார்.
இவர்களுடைய நகைச்சுவையை நாம் இந்த அளவு ரசித்துப் பார்க்கிறோம் என்றால் அதற்குக் காரணமாக இருந்தவர் இயக்குனர் ராஜகோபால் தான். அவர் எத்தனை படங்களுக்குக் கதை வசனம் எழுதியுள்ளார்? கவுண்டமணியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது எப்படி என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க... சொல்றத மட்டும் செய்! வாய கொடுத்து மாட்டிக்கிட்ட அஜித்.. கோபத்தில் கத்திய இயக்குனர்
ராஜகோபால் பணியாற்றிய முதல் படம் கொலுசு. அது 1985ல் வெளியானது. அதன் பிறகு 5 வருடம் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கல. அதன்பிறகு 1990ல் மலேசியாவாசுதேவன் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.
அவர்களுக்கான வசனத்தை ராஜகோபால் தான் எழுதினார். அதனால் அவர்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர்களுடைய படங்களுக்கு காமெடி டிராக் எழுதியவர் தான் ராஜகோபால்.
கவுண்டமணி, செந்தில் மட்டும் இல்லாமல் விவேக், வடிவேலு என பல நகைச்சுவை நடிகர்களுக்கு ராஜகோபால் வசனம் எழுதி இருக்கிறார். அந்த பணி யோகிபாபு வரை தொடர்கிறது.
தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற பெயரில் ராஜகோபால் இயக்கிக் கொண்டு இருக்கிறார். இதுல கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார். ராஜகோபாலைப் பொருத்தவரை எத்தனைப் படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதினார் என்பது அவருக்கே கணக்குக் கிடையாது என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... எம்.எஸ்.வி.யை காப்பி அடித்தாரா இளையராஜா? இசையில் எவ்வளவு சேட்டைன்னு பாருங்க…!
தற்போது கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' அரசியல் சார்ந்த படமாக இருப்பதால் கவுண்டமணியின் அலப்பறைக்கு பஞ்சமே இருக்காது. ஏற்கனவே இவர் அடித்த பல லூட்டிகள் நமக்கு தெரிந்த விஷயம் தான்.
அதனால் இந்தப் படத்திற்கு இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தப் படத்தை இயக்குபவரோ அவரது ஆஸ்தான இயக்குனர் என்பதால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் நினைக்கின்றர்.