Cinema History
முத்துராமனுக்கு இருந்த அந்த வியாதி… சிவாஜி செய்த பேருதவி… நடந்தது இதுதான்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எப்போதுமே ரசிக்கும் வகையில் இருக்கும். இவருக்கு என்று இன்று வரை தமிழ்த்திரை உலகிலும் சரி. வெளியுலகிலும் சரி. ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு மரியாதை உண்டு. விளம்பரம் தேடாமல் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் சிவாஜிகணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜியும், முத்துராமனும் நல்ல நண்பர்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். திருவருட்செல்வர், சிவந்த மண், அவன் தான் மனிதன், மகாகவி காளிதாஸ், ஊட்டி வரை உறவு, கர்ணன், சொர்க்கம், திருவிளையாடல் ஆகிய படங்கள் எல்லாமே காலம் காலமாகப் போற்றப்படுபவை. முத்துராமன் இயல்பாக நடித்து தனக்கென தனிபாணியை உருவாக்கி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர். குறிப்பாக இவருக்குத் தாய்மார்களின் மத்தியில் நல்ல பெயர் உண்டு.
படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி முத்துராமனுக்கு அந்த காலத்தில் பேருதவியாக இருந்துள்ளார். அப்படி என்ன நடந்தது என்று பார்ப்போம்.
நடிகர் முத்துராமனுக்கு வயிற்று வியாதி உண்டு. அதை வெளிப்படையாகக் காட்ட மாட்டார். சிகிச்சையும் பெற்று வந்தார். அது சிவாஜிக்கும் தெரியும். முத்துராமன் படப்பிடிப்பில் சிவாஜி இருந்தாலே அவருக்கு நன்மை தான். படப்பிடிப்பில் முத்துராமனை அவ்வப்போது சிவாஜி தொட்டுப் பார்த்துக் கொள்வார். உடல் உஷ்ணத்தில் மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்பார்.
மாறுதல் தெரிந்தாலோ, வாய் லேசாக கோணினாலோ சிவாஜி ஏதாவது காரணம் சொல்லி படப்பிடிப்பை ரத்து செய்வாராம். உடனே முத்துராமனை அனுப்பி வைத்துவிடுவாராம்.
இதையும் படிங்க… விஷாலை டார்க்கெட் பண்ணும் உதயநிதி!.. ரத்னம் படத்துக்கு போட்டியா அந்த படத்தை இறக்கும் ரெட் ஜெயண்ட்..
அவன் தான் மனிதன், ஊட்டி வரை உறவு ஆகிய படங்களில் சிவாஜி, முத்துராமனின் நடிப்பு செம மாஸாக இருக்கும். அதே போல மூன்று தெய்வங்கள் படத்திலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். திருவிளையாடல் படத்தில் அரசர் செண்பகபாண்டியனாக முத்துராமன் வந்து அசத்துவார். அதே போல சிவாஜி சிவபெருமானாக வருவார். இவர்களது நடிப்பில் படம் செம மாஸாக இருக்கும்.