செம வைலண்ட்டாக இருந்த ரஜினி!. அம்மாவை போல வந்து காப்பாற்றிய சமூக சேவகி.. ஆச்சர்ய தகவல்!..

by சிவா |   ( Updated:2024-02-08 00:13:06  )
rajini
X

நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவருக்கு வந்தது. ஆனால், அதற்கு முன் அவர் மிகவும் ஆக்ரோஷமான மனிதராகவே இருந்தார். அதற்கு காரணம் இரவு, பகல் என ஓய்வில்லாமல் படங்களில் நடித்ததுதான். அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டது.

படப்பிடிப்பிற்கே குடித்துவிட்டு வாருவார். தூக்கம் வரக்கூடாது என்பதற்காக ஜர்தா பீடா போடுவார். ஆனால், அப்படி இருந்த ரஜினியை ஒரு பெண் மாற்றியது பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். தர்ம யுத்தம் படத்தின் படப்பிடிப்பு ஒரு கிறிஸ்துவ தொழிலதிபரின் வீட்டில் நடந்தது. அந்த வீட்டில் ரெஜினா வின்செண்ட் என்கிற வயதானவர் தங்கியிருந்தார்.

இதையும் படிங்க: மகள்களை பல வருடங்கள் மறைத்து வைத்த ரஜினிகாந்த்!.. மண்டோதரி முதல் ரஜினியை சீண்டிய ரகசியங்கள் வரை…

அவருக்கு அந்த வீட்டை படப்பிடிப்புக்கு கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும், அவரின் வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு ரஜினியை பிடிக்கும் என்பதால் மேலே தங்கிகொண்டு கீழ் போர்ஷனை கொடுத்தார். ஆனால், ரஜினி சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வந்தாலும் மதுபோதையில் இருந்தார். படப்பிடிப்பு சரியாக நடக்காமல் இருப்பதற்கு ரஜினிதான் காரணம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

regina

ஒருநாள் அவரை பார்த்த ரஜினிக்கும் குற்ற உணர்ச்சி வர ‘உங்களிடம் பேச வேண்டும்’ என சொல்ல, அந்த அம்மாவும் ‘நானும் உன்னிடம் பேச வேண்டும். தினமும் இப்படி குடித்துவிட்டு வரலமா?. இப்படி வந்தா படப்பிடிப்பு எப்படி நடக்கும்?’ எனக்கேட்க ‘இனிமேல் இப்படி செய்யமாட்டேன் அம்மா’ என ரஜினி சத்தியம் செய்தார். சொன்னதுபோல கொஞ்சம் மாறி இருந்தார் ரஜினி.

ரஜினி அப்போது மருத்துவர் செரியனிடம் மனநல சிகிச்சையும் பெற்றுவந்தார். ஒருநாள் செரியனிடமிருந்து அந்த அம்மாவுக்கு போன் வந்தது. ரஜினி மருத்துவமனயில் மிகவும் வயலண்டாக இருக்கிறார். அவர் அம்மா அம்மா என உங்கள் பெயரை சொல்கிறார். நீங்கள் இங்கே உடனே வாங்க’ என சொல்ல ரெஜினா அங்கே விரைந்து சென்றார். அங்கே மருத்துவர்களும், செவிலியர்களும் ரஜினியிடம் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்கள். அந்த அம்மா ரஜினியை சமாதனப்படுத்த ஹாஸ்பிட்டலில் இருந்து ரஜினி வெளியேறி அந்த அம்மாவின் வீட்டுக்கு போனார்.

இதையும் படிங்க: நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..

‘நான் இங்கேயே கொஞ்சநாட்கள் தங்கலாமா?’ என ரஜினி கேட்க அந்த ரெஜினாவும் சம்மதித்தார். அடுத்தநாள் நேற்று நன்றாக தூங்கியதாக ரஜினி சொல்ல அது செரியனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த அம்மாவிடம் ‘நீங்கள் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்திட்டீங்க’ என பாராட்டினார். அந்த அம்மா செலுத்திய அன்பில் மாறிய ரஜினி படப்பிடிப்புக்கு ஒழுங்காக போனார். அவரோடு தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி பார்த்துக்கொண்டு, படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வரசொன்னார் ரெஜினா. மொத்தத்தில் ரெஜினா அம்மா பெறாத மகனாகவே ரஜினி மாறியிருந்தார்.

rajini

rajini

அந்த வீடு. அந்த அம்மா மற்றும் குழந்தைகளின் அன்பு என ரஜினி மொத்தமாக மாறினார். ஒருநாள் அந்த அம்மா அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. ’நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?’ என புலம்பிய ரஜினிக்கு நல்ல அறிவுரைகளை சொல்லிவிட்டு போனார் ரெஜினா.

சில மாதங்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது ரஜினி நன்றாகவே மாறியிருந்தார். அதோடு, லதாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தார். ரெஜினா அம்மாவுக்கும் மிகவும் சந்தோஷம். ரஜினி திருமண வாழ்க்கையில் நுழைந்து ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்துவிட ரெஜினா அம்மா சமூக சேவகியாக மாறி பல நன்மைகளை மக்களுக்கு செய்தார்.

80களில் பிரபலமான சமூக சேவகி இவர். மதர் தெரசா சமூக நல அமைப்பின் சென்னை நகர பொறுப்பாளராக இருந்தவர் இவர். இயற்கை வைத்தியத்தில் பல்வேறு பட்டங்களையும் பெற்றிருக்கார். ஆனாலும், அதை தொழிலாக செய்யாமல் தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்துவந்தார். அவரது அன்பிலும், சிகிச்சையிலும் மாறியவர்தான் ரஜினி.

தர்மயுத்தம் படத்தில் ரஜினி பாடும் பாடல் வரிகள் இப்படி வரும்..

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா..
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா..
என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா..

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்!...

News source : Selvan Anbu

Next Story