Cinema News
குஷி படத்தில் ‘கண்டபடி கட்டிப்பிடி’ இதுக்கு என்ன அர்த்தம் சார்? பதிலை சொல்லி அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து
Kushi movie: 2000 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி.எஸ்.ஜே, சூர்யாவுக்கு இது இரண்டாவது படம். வாலி படத்தை அடுத்து மற்றொரு வெற்றிப் படத்தை குஷி படத்தின் மூலம் கொடுத்து எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியதற்கு இந்த குஷி படமும் ஒரு காரணம்.
தேவா இசையில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதிலும் குறிப்பாக கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடல் ரசிகர்களை நிற்க வைக்கவிடவில்லை.
இதையும் படிங்க: ஜெயிலர் பக்கா உப்மா… அதுக்கு லியோவே பரவாயில்லை தான்… பிரபல விமர்சகரின் தடாலடி..!
அந்தளவுக்கு அந்தப் பாடலுக்கே அதிகளவு ரசிகர்கள் உருவாகினார்கள். அதில் கண்டபடி கட்டிப்பிடிடா என்ற வரி வரும். அதற்கு என்ன அர்த்தம் என வைரமுத்துவிடமே கேட்கப்பட்டது. அதற்கு வைரமுத்து சில சுவாரஸ்யமான பதில்களை கூறினார்.
அதாவது அந்தப் பாடலில் அந்த வரிகளை வைரமுத்துவே எழுதவில்லையாம். பல்லவியில் வரும் அந்த வரிகளை எழுதியது தேவாதானாம்.கண்டபடி கட்டிப்பிடி வரிகளுக்கு பின்னால் வரும் வரியைத்தான் வைரமுத்து எழுதினாராம்.
இதையும் படிங்க: விஜய் போன் பண்ணி திட்டினாரு!.. வருத்தப்பட்டு பேசிய லலித் – எப்படி போக வேண்டிய படம்?
பாட்டில் ஒரு கமெர்ஷியல் இருக்க வேண்டும் என வைரமுத்துவிடம் தேவா கூறி கூடவே இந்த இரண்டு வரிகளை தேவாதான் பாடிக் காட்டினாராம். இதை வைத்துக் கொள்ளலாமா என்றும் தேவா கேட்டாராம்.வைரமுத்துவும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
என்னுடைய வரியில் கவித்துவம் இருக்கும். மேலும் இதை பற்றி சொல்லவேண்டுமென்றால் வாழ்க்கையில் எல்லா அம்சமும் வேண்டியிருக்கு. புனிதம் ஒரு பக்கம். இந்த மாதிரி கொண்டாட்டம் ஒருபக்கம். எல்லாம் சேர்ந்த சமூகத்தில் இதற்கும் ஒரு பங்கு இருக்கிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் படத்துல ஒரு வெங்காயமும் இல்ல!.. இறங்கி அடிக்கும் மன்சூர் அலிகான்..
இதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அதை நான் புரிந்து கொள்கிறேன் என அந்த பாடலை பற்றி வைரமுத்து கூறினார்.