Connect with us
Vijayakanth

Cinema History

விஜயகாந்தின் வாழ்க்கையே மாற்றிய படம் ரிலீஸ் ஆகவே இல்லை!.. என்ன படம் தெரியுமா?!…

திரையுலகில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தவர் நடிகர் விஜயகாந்த். மதுரையை சேர்ந்த விஜயராஜ் சினிமாவுக்காக விஜயகாந்த் என பெயரை மாற்றிக்கொண்டவர். சினிமா உலகில் பின்புலத்தோடு வந்தவர்களே முன்னேற தடுமாறும்போது, விஜயகாந்த் கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் முன்னுக்கு வந்தவர்.

சின்ன சின்ன வேடங்களில் நடித்து அப்படியே வளர்ந்து ஹீரோ வாய்ப்புகளை பெற்று உச்சத்திற்கு சென்றவர். ஆனால், இவர் வளர்ந்து வந்த நேரத்தில் இவருக்கு பல வாய்ப்புகளை பெற்று கொடுத்த ஒரு திரைப்படம் கடைசிவரை வெளியாகவே இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா?.. ஆனால், அதுதான் உண்மை.

Vijayakanth

Vijayakanth

80களின் துவக்கத்தில் விஜயகாந்த் ஒரு வளரும் இளம் கதாநாயகனாக இருந்தார். இனிக்கும் இளமை என்கிற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும், ஓம் சக்தி, தூரத்து இடிமுழக்கம் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அப்போது ‘நூலறுந்த பட்டம்’ என்கிற திரைப்படம் உருவானது. அதில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார்.

தூரத்து இடி முழக்கம் படத்தில் விஜயகாந்துடன் நடித்த பூர்ணிமா தேவி கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக சக்கரவர்த்தி என்கிற நடிகர் நடித்தார். இப்படத்திற்கு இளையராஜாவின் மூத்த அண்னன் பாவலர் வரதராஜனின் மகன் ஸ்டாலின் வரதராஜன் இசையமைத்தார். இதுதான் அவருக்கும் முதல் படம். இப்படத்திற்கு பின்னர் ‘இளைய கங்கை’ என்கிற பெயரில் சில படங்களுக்கு அவர் இசையமைத்தார்.

noolarantha pattam

சரி நூலறந்த பட்டத்திற்கு வருவோம். இப்படத்தில் விஜயகாந்த் கிராமத்து மைனராக, பெண்கள் பின்னால் சுற்றுபவராக, கெட்டவனாக நடித்திருந்தார். இப்படத்தை ஜோதி மவுலீஸ்வரய்யா எனும் அறிமுக இயக்குனர் இயக்கினார். சம்பத் என்பவர் இப்படத்தை தயாரித்தார். இப்படம் முடிந்து ரிலீஸுக்கு கொஞ்சம் தாமதமாகி வந்தது. இதற்கிடையில், விஜயகாந்த் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார்.

எஸ்.ஏ.சி இப்படத்தை துவங்கிய போது யாரை ஹீரோவாக போடலாம் என்கிற பேச்சுவந்தபோது ‘நூலறந்த பட்டம்’ படத்தை எடுத்தவரை பார்த்துவிட்டு விஜயகாந்தை தேர்ந்தெடுத்தார். அதாவது நூலறந்த பட்டம் படம் மூலம்தான் விஜயகாந்துக்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் வெற்றியால்தான் விஜயகாந்த் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களிலும் நடித்து முன்னேறி தனக்கெனெ ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

sattam

ஆனால், இதற்கெல்லாம் காரணமாக இருந்த ‘நூலறந்த பட்டம்’ திரைப்படம் கடைசிவரை வெளியாகவில்லை. சட்டம் ஒரு இருட்டறை படம் விஜயகாந்தின் இமேஜை மாற்றியிருந்ததால், பெண்கள் பின்னால் சுற்றும் மைனராக, கெட்டவனாக விஜயகாந்த் நடித்தால் மக்கள் பார்க்க மாட்டார்கள் என நினைத்து வினியோகஸ்தர்கள் அப்படத்தை வாங்க முன்வரவில்லை. எனவே, அப்படம் பொட்டிக்குள் முடங்கிப்போனது.

ஆனாலும், விஜயகாந்த் பெரிய நடிகராகி, ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுக்கும் பெரிய ஹீரோவாகி, அரசியலிலும் கால் பதித்து ஒரு இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அண்ணன் மீது இவ்வளவு பாசமா!.. எம்.ஜி.ஆர் எடுத்த அதிரடி முடிவு… ஆனால் நடந்துதான் டிவிஸ்ட்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top