ஒரு தலை காதலை அழகாய் காட்டிய படங்கள்! காதலுக்காக மரண படுக்கை வரை சென்ற முரளி..

by Rohini |   ( Updated:2023-08-22 06:52:04  )
murali
X

murali

காதல் இல்லாமல் இந்த உலகம் இல்லை. இரு மனங்கள் இணையும் போதுதான் அங்கு அழகான காதல் பிறக்கின்றது. இது எல்லாருக்கு பொதுவானதுதான். உலகில் பிறக்கின்ற மனிதர்கள் காதலை கடந்துதான் வருகின்றனர். எல்லார் வாழ்க்கையிலும் காதல் கண்டிப்பாக இருந்திருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காதலை அழகாய் வெளிப்படுத்திய படங்கள் பல வெளிவந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒருதலை காதலை மையப்படுத்தி ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகின்றன. அதை பற்றிதான் இந்த லிஸ்ட்டில் பார்க்க இருக்கிறோம்.

இயற்கை : 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்தார். படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை தேசிய அளவில் இந்தப் படம் பெற்றிருக்கிறது. மூவருக்கும் இடையிலான காதல் மையக் கருவை அடிப்படையாக கொண்ட படமாக இயற்கை படம் அமைந்தது.

இதையும் படிங்க: என் கல்யாண விஷயம் உங்க யாருக்கும் தெரியாது.. பெண் ரசிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் தேவரகொண்டா..

சியாம், அருண்விஜய், குட்டி ராதிகா, சீமான், வாசு போன்ற பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சியாம் ஒரு தலையாக குட்டி ராதிகாவை காதலிக்க தன் நீண்ட நாள் காதலான அருண்விஜய்க்காக குட்டி ராதிகா காத்துக் கொண்டிருப்பார். திடீரென தன் காதலியை பார்க்க அருண் விஜய் வருவதும் அதை பார்த்து சியாம் மனதளவில் வேதனைப்படுவதும் படம் பார்த்த அனைவரையும் உருக வைத்திருக்கும்.

பூவே உனக்காக : விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய், சங்கீதா, சார்லி, நம்பியார், போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான படம் தான் பூவே உனக்காக. இந்தப் படத்தில் விஜய் ஒரு தலையாக தன் எதிரே குடியிருக்கும் ஒரு நடிகையை காதலிக்க ஆனால் அவரோ தன் சொந்த மாமன் பையனை காதலிப்பதாக கூறுவார். இது தெரிந்து விஜய் அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்க படம் என்னானது என்பதுதான் கதையே. காதலின் ஆழத்தை மிக அற்புதமாக காட்டிய படங்களில் இந்த பூவே உனக்காக படம் மக்களை மிகவும் கவர்ந்தப் படமாக அமைந்தது.

இதயம் : 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை கதிர் என்பவர் இயக்கியிருந்தார். இதில் முரளி மற்றும் ஹீரா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் பின்னர் வந்த காதல்கருத் திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தது. படத்தில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஹீராவை அவருக்கு தெரியாமலேயே முரளி காதலிக்கிறார்.

ஆனால் அவரிடம் சொல்ல முரளிக்கு தைரியமில்லாமல் போகிறது. அந்த வலியிலேயே அவருக்கு இதய நோய் வர இது தெரிந்து ஹீரா தன் காதலை சொல்வதற்காக மரண படுக்கையில் கிடக்கும் முரளியை பார்க்க வருகிறார். ஆனால் அந்த சமயத்தில் எந்தவொரு துயரச்செய்தியையும் மகிழ்ச்சியான செய்தியையும் தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் முரளி இருக்க அதன் பிறகு எப்படி கதை நகர்கிறது என்பதுதான் படம்.

இதையும் படிங்க: ஒரு ஹிட்டு வந்தா இப்படியா!. பழச நினைச்சு பாரு நாட்டாமை!.. புலம்பும் தயாரிப்பாளர்…

மௌனம் பேசியதே: 2002 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சூர்யா, த்ரிஷா ஆகியோர் நடித்திருப்பாரகள். இந்தப் படத்தை அமீர் இயக்கியிருப்பார். காதலே பிடிக்காத ஒரு முரட்டு குணம் பிடித்த சூர்யா ஒரு கட்டத்தில் தன்னுடன் த்ரிஷா பழகும் முறையை பார்த்து அவருடன் காதல் ஏற்படுகிறது. ஆனால் த்ரிஷாவோ வேறு ஒருவரை காதலிக்கிறேன் என சூர்யாவிடம் உதவி கேட்க வருவார்.

அதன் மூலம் சூர்யா மனமுடைந்து வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இருப்பார். அதன் பிறகு சூர்யாவை தேடி அவரை கல்லூரியில் காதலித்துக் கொண்டிருந்த ஒருவர் தேடி வருவது தான் கதை.

ஷாஜகான்: 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜயுடன் சேர்ந்து ரிச்சா பல்லட் நடித்திருப்பார். பொதுவாகவே எல்லாருடைய காதலுக்கும் உதவி செய்யும் விஜய் ரிச்சா பல்லட்டை பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆனால் இது ரிச்சாவுக்கு தெரியாது. இன்னொரு நண்பர் காதலியை எப்படியாவது தன் வலையில் வீழ்த்துவதற்காக விஜயிடம் ஐடியா கேட்க கடைசியில் நண்பரின் காதலி தான் காதலித்த பெண் என தெரிய விஜய் நட்புக்காக தன் காதலையே தியாகம் செய்யும் விதமாக படம் அமைந்திருக்கும். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: பட்ஜெட்ட கேட்டா தலையே சுத்துது!.. ரசிகர்களை மெர்சலாக்கும் தனுஷின் புது பட அப்டேட்!…

Next Story