Connect with us

Cinema History

தமிழில் டொக்கு மூஞ்சு என கலாய் வாங்கி ஹிட்டு கொடுத்த 5 நடிகர்கள்!.. இதோ லிஸ்ட்…

சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகன் ஆவதையும் மக்களிடம் வரவேற்பு பெறுவதையும் அவரது முதல் படமே உறுதி செய்கின்றன. முதல் படம் ஒரு நடிகருக்கு சரியாக அமையாவிட்டால் பிறகு அவர் சினிமாவில் உயரத்தை தொடுவது என்பது பெரும் கடினமாகிவிடும்.

ஒரு கதாநாயகனை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போது பெரும் பெரும் கதாநாயகராக இருக்கும் பலரும் தங்களது முதல் படத்தில் பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளனர் அப்படியான சில நாயகர்களை இப்போது பார்ப்போம்.

நடிகர் சிவாஜி கணேசன்

தமிழில் கலைஞர் கைவண்ணத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தில் நடிக்கும் பொழுது குறைவான சம்பளத்தில்தான் அவர் நடித்து வந்தார்.

sivaji ganesan 2

sivaji ganesan 2

அப்பொழுது அவரது உடல் அமைப்பும், முகமும் ஒரு கதாநாயகனுக்கான தகுதியில் இல்லை என்று பலரும் அவரை விமர்சித்தனர். அவரது உருவத்தை அனைவரும் கேலி செய்தனர். அவர் சினிமாவில் பெரிதாக வரமாட்டார் என்று நினைத்தனர். அப்போது தயாரிப்பாளர் ஏ.வி.எம்செட்டியார் கூட சிவாஜிக்கு எதிராகவே இருந்தார். ஆனால் அப்படி அனைவராலும் ஒதுக்கப்பட்ட சிவாஜிதான் பிறகு தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரும் நடிகர் ஆனார்.

இதையும் படிங்க:திடீரென ஏற்பட்ட விபத்து!.. ஜனகராஜுக்கு ஏற்பட்ட சோகம்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட இயக்குனர்..

நடிகர் விஜய்.

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆனவர் நடிகர் விஜய். கதாநாயகனாக அறிமுகமாகும் போது கருப்பான நிறத்தில் ஒல்லியான தோற்றத்தில் இருந்தார் விஜய்.

vijay young

இவையெல்லாம் கதாநாயகனுக்கு தகுதி இல்லாத விஷயங்களாக பார்க்கப்பட்டன. எனவே விஜய் கதாநாயகனாவது கஷ்டம் என கூறப்பட்டது அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதனை அடுத்துதான் விஜயகாந்துடன் விஜய்யை சேர்த்து நடிக்க வைப்போம் என்று நினைத்த எஸ்.ஏ சந்திரசேகர் செந்தூரப்பாண்டி திரைப்படத்தை இயக்கினார்.

அப்படியெல்லாம் பெரும் அடிகளை வாங்கிய விஜய் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

நடிகர் பிரபு

1982ல் வெளிவந்த கோழி கூவுது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபு. சிவாஜி எதிர்கொண்ட அதே பிரச்சினையை பிரபுவும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என்னதான் சிவாஜியின் மகன் என்றாலும் கூட பிரபுவிடம் ஒரு தனித்துவமான நடிப்பு இல்லாமல் இருந்தது.

prabhu

அவரது நடிப்பும் கிட்டத்தட்ட சிவாஜி கணேசன் நடிப்பு போலவே இருந்தது அதனால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் பிரபு. அதன்பிறகு அவர் வரிசையாக கொடுத்த ஹிட் படங்கள் அவற்றை மறக்க வைத்தன. அதில் சின்ன தம்பி மிக முக்கியமான திரைப்படமாகும்.

இதையும் படிங்க:எல்லா பொண்ணுக்கும் பிடிக்கும் அந்த விஷயம்.. ஆனா அமலாவிற்கு பிடிக்காதாம்!.. காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவிங்க!..

நடிகர் ரஜினிகாந்த்

கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த போது அவருக்கு சரியாக தமிழ் கூட பேச வரவில்லை. அப்போது மிகவும் கருப்பாக இருந்த ரஜினி ஒரு பெரும் கதாநாயகன் ஆவார் என்று யாருமே நம்பவில்லை.

rajinikanth

rajinikanth

ஆனால் இயக்குனர் பாலச்சந்தர் மட்டும் கண்டிப்பாக இவன் பெரிய ஆளாக வருவான் என்று நம்பினார். ஆரம்ப கட்டத்தில் ரஜினி திரைப்படங்களில் நடித்தப்போது அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அப்போது கமல்ஹாசன்தான் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக இருந்தார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்த ரஜினிகாந்த் பிறகு மாறாத ஒரு சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார்.

நடிகர் தனுஷ்

ரஜினி, விஜய் போலவே ஒல்லியான தேகமும் கருப்பான தோற்றமும் கொண்டிருந்த காரணத்தினால் தனுஷும் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். ஆரம்பத்தில் அவர் நடித்த காதல் கொண்டேன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற திரைப்படங்களின் பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் தனுஷ்.

dhanush young

dhanush young

அவரே மேடைகளில் பேசும்பொழுது என்னையெல்லாம் ஹீரோவாக ஏற்றுக் கொண்டதே பெரிது என்று கூறியிருப்பார். அந்த அளவிற்கு அதிக அடிகளை வாங்கிய தனுஷ் தற்சமயம் தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஹாலிவுட் வரை சென்று நடித்து வந்துவிட்டார்.

இதையும் படிங்க:இரவு முழுவதும் காரிலேயே தூங்கிய ரஜினி!.. கொதித்தெழுந்த பி.வாசு.. அந்த அட்வைஸ்தான் ஹைலைட்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top