More
Categories: Cinema History Cinema News latest news

‘புரட்சித்தலைவி’ பட்டத்திற்கு காரணமே சோபன் பாபுதானா? ஜெயலலிதா செய்த புரட்சியை நக்கலடித்த பிரபலம்

தமிழ் சினிமாவில் இப்பொழுதுதான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அப்பவே ஒரு இரும்பு பெண்மணியாக மாபெரும் ஆளுமையாக வலம் வந்தவர் செல்வி ஜெயலலிதா. கிட்டத்தட்ட 127 படங்களில் நடித்த ஜெயலலிதா தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் முழுவதுமாக ஆர்வம் இல்லாதவராகத்தான் நடிக்க வந்தார். சிறுவயதிலேயே அப்பாவை இழந்த ஜெயலலிதா அம்மாவின் அரவணைப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அம்மா சந்தியாவும் சென்னை வந்துவிட 10 வது வயதில் தான் ஜெயலலிதாவும் சென்னை வந்து சேர்ந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க : ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!.. ராஷ்மிகா மந்தனா காலில் பட்டுனு விழுந்த மாப்பிள்ளை!.. வைரலாகும் வீடியோ..

அதுவரை தாய், தந்தை அன்பு கிடைக்காமல் மிகவும் ஏங்கியிருக்கிறார் ஜெயலலிதா. இதை பற்றி ஒரு பேட்டியில் கூட  ‘எனக்கு உண்மையான அன்பு கிடைத்ததில்லை, நிபந்தனையற்ற அன்பை நான் என்றுமே பெற்றதில்லை’ என கூறியிருந்தார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் பார்க்க வைத்தார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்து வந்த ஜெயலலிதாவுக்கு ஆந்திர நடிகர் சோபன் பாபுவுடன் நெருக்கம் ஏற்பட்டது. அவருடன் தெலுங்கில் நடிக்கும் போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாகவும் மாறியது.

இதையும் படிங்க : 12 நாளில் எடுத்து சூப்பர் ஹிட் அடித்த எம்.ஜி.ஆர் படம்!.. அட அந்த படமா?!…

ஒரு கட்டத்தில் இருவரும் லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருந்து வாழ்ந்து வந்தனர். சோபன் பாபுவுக்கு தன் வீட்டிலேயே உணவு பரிமாறும் புகைப்படம், பால்கனியில் இருந்து டாட்டா சொல்வது மாதிரியான புகைப்படம் என வைரலானது. இதை ஜெயலலிதாவும் பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறாராம்.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறும் போது  ‘ஜெயலலிதா செய்த ஒரே புரட்சி நம் தமிழ் கலாச்சாரத்துக்கு ஒத்துவராத லிவ்விங் முறையில் இருந்ததுதான்.மேலும் அதை வெளிப்படையாக வேற சொன்னார் பாருங்க. அதுதான் அவர் செய்த மாபெரும் புரட்சி. அதன் காரணமாகத்தான் அவருக்கு புரட்சித்தலைவி என்ற பெயர் வந்ததோ என்னமோ? மற்ற படி அவர் என்ன புரட்சி செய்திருக்கிறார்?’ என்று சிரித்தபடியே கூறினார்.

இதையும் படிங்க : விஜய்க்கு ஹீரோயினாக ரெடியாகிட்டாரா அதிதி ஷங்கர்!.. காருக்குள்ள இந்த குத்து குத்துறாரே!..

Published by
Rohini

Recent Posts