‘ஜவான்’ போட்ட போடு.. இன்ஸ்டாவில் நுழைந்த ரகசியம்.. சும்மா ஆடுமா குடுமி?!…

Published on: September 4, 2023
nayan
---Advertisement---

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று பாலிவுட்டில் தன்னுடைய முதல் காலடியை வைத்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜவான். இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தீபிகா படுகோனே, சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : கர்வத்தில் எம்.எஸ்.வி செய்த செயல்… ஒரே பாடலால் கண்ணீர் விட வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

படத்தில் பணியாற்றிய பெரும்பாலான டெக்னீசியன்கள் தமிழ் நாட்டை சார்ந்தவர்களாகவே இருந்தனர். அட்லீ இங்கு இருந்து ஏராளமான டெக்னீசியன்களை அழைத்து சென்று பாலிவுட்டில் கோலிவுட்டின் பெருமையை பறைசாற்றியிருக்கிறார்.

சமீபத்தில் தான் ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு  படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் வந்த நிலையில் நயன் மட்டும் வரவில்லை. அதற்கு  காரணம் அவர் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளா சென்று விட்டதாக மேடையிலேயே அட்லீ கூறினார்.

இதையும் படிங்க : ஜெயலலிதாவை தொடர்ந்து சின்னம்மாவிடமும் இருந்து வந்த மிரட்டல்! சசிகலா தூண்டுதலில் விஜய் நடித்த படம்

கேரளா ஏதோ இமயமலை பக்கத்தில் இருக்கிற மாதிரி அவரால் வரமுடியவில்லை என்ற காரணத்தை கூறியிருக்கிறார் அட்லீ. ஆனால் உண்மையில் ஒப்பந்தத்திலேயே முதலில் நடிக்க மட்டும் வருவேன். மற்ற பட சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லியே கையெழுத்து போடுகிறாராம் நயன்.

ஆனால் இதுவே அவரின் சொந்தப் படமாக இருந்தால் முதல் ஆளாக வந்து நிற்கின்றார். ஆனால் பாலிவுட்டில் நயன் வருவார் என்றே எதிர்பார்த்தார்களாம். இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்குத்தான் வர இயலவில்லை. ஆனால் படத்தை பற்றி இன்ஸ்டாவிலாவது புரோமோட் பண்ணுங்கள் என்று படக்குழு கூறியதன் பேரில் தான் வேகமாக இன்ஸ்டா பக்கத்தை ஆரம்பித்தாராம் நயன்.

இதையும் படிங்க : அது ரஜினிக்குதான்… அதுக்கு ஏன் இத்தனை சண்டை அமைதியா இருங்க! சுரேஷ் கிருஷ்ணா பதிலடி!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.