விஜயுடன் தொடர்ந்து நடித்த சதீஷ் அஜித் கூட நடிக்காமல் போன காரணம்? வந்த வாய்ப்பும் போச்சே

Published on: February 17, 2024
ajith
---Advertisement---

Actor Sathish: சினிமாவை பொறுத்தவரைக்கும் சமீபகாலமாக காமெடி நடிகராக நடித்தவர்கள் இப்போது ஹீரோவாக அவதாரம் எடுப்பதை பார்க்க முடிகிறது. சந்தானத்தை தொடர்ந்து இப்போது சதீஷும் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காஞ்சூரி கண்ணப்பன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்தும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார் சதீஷ்.

இதையும் படிங்க: திடீரென சம்பளத்தை உயர்த்திய பிரபல பாடகி!.. எஸ்.ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்…

விஜயின் படங்களில் பெரும்பாலும் சதீஷை பார்க்க முடியும். இதை குறிப்பிட்டே யோகிபாபு ஒரு மேடையில் விஜய் கீழே உட்கார அவரை பார்த்து ‘விஜய் சார் எப்ப பார்த்தாலும் சதீஷுக்கே வாய்ப்பு கொடுக்கீங்க. எனக்கு எதாச்சும் கொடுங்க சார்’ என கேட்பார்.

அந்தளவுக்கு விஜயுடன் நெருக்கமான நண்பர் கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்திருப்பார். இந்த நிலையில் விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் சதீஷ் ஏன் அஜித் படங்களில் மட்டும் நடிக்கவில்லை என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருந்து வந்தது.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனுக்காக உச்ச நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா… வச்சு செய்யும் நடிகர்… போச்சா?

இதை அவரிடமே கேட்க அதற்கு பதிலளித்த சதீஷ் ‘அஜித் கூட நடிக்க கூடாது என இல்லை. அப்படி எந்த வாய்ப்பும் வரவில்லை. ஆனால் ஒரு படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. எல்லாம் பேசி முடிவாகியும் விட்டது. சூட்டிங் வரை ஓகே ஆகிவிட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ என்னை வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். என் கேரக்டரில் என் நண்பர் ஒருவர்தான் நடித்தார்’ என சந்தானத்தை குறிப்பிட்டு பேசினார் சதீஷ்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.