Categories: Cinema News latest news

படம் சுமாருனாலும் ஹவுஸ்ஃபுல்! அதற்கு காரணம் இதுதான்.. சிங்கப்பூர் சலூன் குறித்து பிரபலம் சொன்ன தகவல்

Singapore Saloon: சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இந்தப் படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தை கோகுல் இயக்க படம் ஓரளவு மக்களை சிரிக்க வைத்திருக்கிறது என்று சொல்லலாம். சின்ன வயதில் இருந்தே முடி திருத்தும் ஒருவரை கண்டு பாலாஜி இன்ஸ்பியர் ஆக தானும் எதிர்காலத்தில் முடி திருத்துபவராக வர வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்காக சில முயற்சிகளை எடுக்கிறார்.

இதையும் படிங்க: ரத்னகுமார் செஞ்ச வேலையில் மொத்தமும் காலி!.. கோபத்தில் லோகேஷ் என்ன பண்ணார் தெரியுமா?!..

ஆனால் தான் கொண்ட கொள்கையில் அவ்வப்போது பாலாஜி இடம் மாறுவது ஏற்புடைதாக இல்லை. இருந்தாலும் படத்தின் முதல் பாதியில் காமெடி கை கொடுத்தது. அதற்கு காரணம் சத்யராஜ் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் சத்யராஜ் கஞ்சனாக நடித்திருப்பார்.

இப்படி காமெடியை நம்பியே இந்தப் படம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். இருந்தாலும் இந்தப் படம் ஓடும் திரையரங்குகளில் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கு காரணம் ஆர்.ஜே.பாலாஜி செய்த ப்ரோமோஷன் தான் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கேப்டன் நினைவிடத்தில் கூல் சுரேஷ்! சந்தானத்திற்காக ஓடோடி வந்து மாஸ் காட்டிய சம்பவம்

இதை குறிப்பிட்டு யோகிபாபு நடிக்கும் ஒரு புதிய படத்தின் தயாரிப்பாளர் ‘இந்தளவுக்கு ப்ரோமோஷன் செய்தால்தான் தயாரிப்பாளரை காப்பாற்ற முடியும் என பாலாஜி நினைத்திருக்கிறார். அதன் விளைவுதான் இன்னிக்கு சிங்கப்பூர் சலூன் சுமாரான வீயூவ்ஸ் வாங்கினாலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என் படத்திற்கு அப்படி யாரும் ப்ரோமோஷனுக்கு வரவில்லை. ’ என யோகிபாபு வராததையும் சொல்லி தன் வேதனையை பகிர்ந்தார் அந்த தயாரிப்பாளர்.

Published by
Rohini