Jananayagan: ஜனநாயகனுக்கும் பராசக்திக்கும் எத்தனை ஸ்கிரீன்கள் தெரியுமா? விஜய்க்குத்தான் முதலிடம்

Published on: January 7, 2026
---Advertisement---

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்த பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. ஜனவரி 9 ஆம் தேதி படம் ரிலீஸாக இருந்த நிலையிலி இன்னும் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. ஆனால் யுகேவில் படத்தை சென்சார் செய்து 15 ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். படத்தை 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் இன்னும் தணிக்கை செய்யப்படாமலேயே இழுத்தடிக்கிறார்கள். டிசம்பர் மாதமே தணிக்கைக் குழுவுக்கு படத்தை அனுப்பியிருக்கிறார்கள். அங்கு சில காட்சிகளை கட் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை போல் படக்குழுவும் மாற்றங்களை செய்து மீண்டும் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை சென்சார் செய்யப்படாமல் படம் இழுபறியில் இருக்கிறது.

Also Read

அதனால் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரோ பிஜேபிக்கு ஆதரவு என்ற ஒரு தகவலும் உள்ளது. அப்படியிருக்க மத்தியில் இருந்து ஜன நாயகனுக்கு எந்த ஒரு பிரஷரும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. அப்புறம் எதுக்கு இவ்ளோ தூரம் படத்திற்கு தொந்தரவு கொடுக்கிறார்கள் என்ற வகையிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

இந்த நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகிறது. அதற்கு அடுத்த நாள் பராசக்தி படம் ரிலீஸாகிறது. எந்த படத்திற்கு அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்படும் என்றும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதில் ஜன நாயகனுக்கு 650 ஸ்கிரீன்களும் பராசக்திக்கு 450 ஸ்கிரீன்களும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதை திரைப்பட திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் கூறியிருக்கிறார்.