‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட க்ளைமேக்ஸ் பற்றிய ரகசியம்! இவ்ளோ வலிகளுக்கு நடுவே எடுத்த காட்சியா அது?

by Rohini |   ( Updated:2024-05-24 04:22:58  )
manju
X

manju

Manjumel Boys: கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. மலையாள படமான இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டதால் இந்த படத்தில் பல காட்சிகள் தமிழிலும் படமாக்கப்பட்டன.

இந்த படம் ரிலீஸ் ஆகி உலக அளவில் 200 கோடி அளவில் வசூலை வாரி அள்ளியது. இது தமிழில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் குணா குகையும் அதில் அமைந்த குணா பட பாடலான கண்மணி அன்போடு காதலன் பாடலும் தான்.

இதையும் படிங்க: சினிமா கத்துக்க மனுசன் என்னவெல்லாம் செஞ்சிருக்காரு!.. போராடி வெற்றி பெற்ற அயோத்தி பட இயக்குனர்…

அதுவும் அந்த பாடல் இறுதியாக படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் ஒலிக்கும் போது அனைவருக்கும் ஒரு கூஸ் பம்ப் உருவானதை உணர முடிந்தது. இதற்கிடையில் அந்த கிளைமேக்ஸ் கட்சியில் சுபாஷ் ஆக நடித்திருக்கும் அந்த கேரக்டர் குழிக்கு உள்ளே இருந்து வெளியே வரும்போது அவர் உடம்பு முழுவதும் சேறும் சகதியமாக இருக்கும்.

ஆனால் அது உண்மையிலேயே சேறு இல்லையாம். ஓரியோ பிஸ்கட்டை கரைத்து தான் அவர் உடம்பு முழுவதும் பூசி விட்டார்களாம். அதனால் அவ்வப்போது சுபாஷ் கேரக்டரில் நடித்த அந்த நடிகரின் மீது எறும்புகள் கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவாளர் அந்த காட்சியை மிகவும் தத்ரூபமாக எடுத்திருப்பார். இந்த ஒரு ரகசியத்தை சமீபத்தில் படத்தின் இயக்குனர் சிதம்பரம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கூலியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் இதுதான்!.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…

Next Story