Cinema History
சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!
பச்சை விளக்கு படத்தை பீம்சிங் இயக்கினார். சிவாஜி, சௌகார் ஜானகி, விஜயகுமாரி, எஸ்எஸ்.ராஜேந்திரன், ரங்கராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ‘கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதிலும் கிடைத்தது’ இன்று என்ற பாடல் தான் அது. டிஎம்எஸ். அருமையாக பாடியிருப்பார். சிவாஜி ரயிலில் இன்ஜின் டிரைவர். தம்பி, தங்கச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பார். தங்கச்சிக்காகப் பாடிய பாடல். கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது.
ஆனால், இந்தப் பாடலில் தங்கச்சி, தங்கை என்று ஒரு வரி கூட வராது. இந்தப் பாட்டை ஹரி காம்போதி ராகத்தில் பாடியிருப்பார். 1969ல் வந்த படம் இது. அந்தப் பாடலில் இவ்வளவு வெரைட்டியா என நம்மையே வியக்க வைக்கும். ஆரம்பத்தில் ரயில் போகும் காட்சி வரும். அந்த ரயிலிலேயே ஸ்ட்ரிங்ஸ் போகும் இசை வரும். அதை நாம் எப்போ ஸ்ட்ரிங்ஸ் ஆரம்பித்தது என்று கண்டே பிடிக்க முடியாது. இந்தப் பாடலில் ஒரு ஜாலி மூடுக்காக விசில் சவுண்டைக் கொடுத்து இருப்பார்கள்.
கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதிவும் கிடைத்தது இன்று, ஆசை பிறந்தது, அன்று யாவும் நடந்தது இன்று என்று பல்லவியைப் பாடியிருப்பார். அந்தப் பாடலில் ஆசையையும், அது அடங்கும் விதத்தையும் மெட்டில் அருமையாகக் கொண்டு வந்திருப்பார். முதல் இடை இசையை மிலிட்டரி பேரேடு ஸ்டைலில் இருக்கும்.
அடுத்து சரணத்தில் ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் ஆறாதா, அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதா, என்றொரு காலம் ஏங்கியதுண்டு, இன்று கிடைத்தது பதில் என்று. இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு என்று முதல் சரணத்தில் அழகாகப் பாடியிருப்பார். அடுத்த சரணத்தில் வானத்தில் ஏறி சந்திர மண்டலம் வாசலைத் தொடலாமா என பாடியிருப்பார்.
3வது இடையிசையில் சம்பந்தமே இல்லாமல் செனாய் கருவி இசையைக் கொடுத்து இருப்பார். குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கு இணையாகும். குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுகமாகும். படித்த மாந்தர் வாழும் நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடைமை. நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனி உடைமை. ஒரே பாட்டில் நாட்டையும், வீட்டையும் அழகாக சொல்லியிருப்பார்.
இந்தப் பாடல் முழுவதும் தொப்பியைக் கையில் வைத்தபடி நடந்து வருவது தான் சிவாஜியின் டான்ஸ். இந்தப் பாடலின் கடைசி வரியில் கண்ணதாசன் எழுதியதை நினைத்தால் கோபம் தான் வருகிறது. ஏன்னா அப்போ படித்தவர்கள் வாழ்ந்த போது பொதுவுடைமை சிறப்பா இருந்தது. இப்போ நாடு மாறிப் போச்சே என்று கோபம் தான் வருகிறது.
இதையும் படிங்க… சிவாஜி குடும்பத்திலிருந்து இவ்வளவு நடிகர்களா?!.. அட லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே!..
படித்த மாந்தர் வாழும் நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடைமை. ஆனா இன்னைக்கு அப்படி இருக்கான்னா… இல்ல. அவர் ஒருவேளை அப்போ ரஷ்யாவுக்குப் போயிட்டு வந்து எழுதியிருக்கலாம். அல்லது இவரும் தன்னை நினைத்து எழுதியிருக்கலாம். ஆனா இன்னைக்குப் படிச்சவன் தான் தப்பு பண்றான். படிக்காதவன் தப்பு பண்ணிட்டு தண்டனையை அனுபவிக்கிறான்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.