வேட்டையன் கதை வேறலெவல்!.. ஆனா ரஜினிக்கு செட் ஆகுமா?!.. ஒரு அலசல்!...

by சிவா |   ( Updated:2024-08-24 09:37:07  )
vettaiyan
X

#image_title

Vettaiyan: ஜெயிலர் ஹிட்டுக்கு பின் ரஜினி நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கியவர் இவர். அடிப்படையில் இவர் ஒரு பத்திரிக்கையாளர். எனவே, சமூக அக்கறை கொண்டவர். இது ஜெய்பீம் படத்தை அவர் சொன்ன விதத்திலேயே புரிந்துகொள்ள முடியும்.

அந்த படம் ரசிகர்களிடம் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியது. மேலும் இருளர் இனத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு சார்பில் உதவிகளும் கிடைக்க அப்படம் உதவியது. அப்படிப்பட்ட இயக்குனர்தான் இப்போது ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: விடுதலை தயாரிப்பாளருக்கு வெற்றிமாறன் கொடுத்த அதிர்ச்சி!.. மீண்டும் மீண்டுமா?!..

இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மேலும், ராணா டகுபதி, பஹத் பாசில், ரித்திகா சிங், அமிதாப்பச்சன் என பலரும் நடித்துள்ளனர். எனவே, இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில்தான் இந்த படத்தின் கதை என்ன என்பது வெளியே கசிந்திருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரஜினி அதிகமான என் கவுண்டர்களை செய்வார். அதை கெத்தாகவும் நினைப்பவர். ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவரின் மனநிலை மாறுகிறது. தன்னால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்களை போய் சந்தித்து அவர்களின் பின்னணி பற்றி தெரிந்துகொள்கிறார்.

vettaiyan

vettaiyan

அதன்பின் என் கவுண்டரே தவறு என்கிற எண்ணம் அவருக்கு வருகிறது. எனவே, அதற்கு எதிராக போராடவும் முடிவெடுக்கிறார். அதனால் அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. ரஜினி எப்போதும் பிற்போக்குத்தனமான விஷயங்களை ஆதரிக்கும் வலது சாரியாகவே கருதப்படும் ஒரு நடிகர்.

ஆனால், அவரையும் மீறி மக்களுக்காக போராடும் ஒரு இடதுசாரி போல காலா படத்தில் நடித்திருப்பார். ஆனால், அந்த படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, இந்த கதை ரஜினிக்கு செட் ஆகுமா என்பது தெரியவில்லை. ஆனாலும், ஜெய் பீம் படத்தில் ஞானவேல் அமைத்த திரைக்கதை போல இந்த படத்தில் திரைக்கதை அமைத்திருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..

Next Story