RRR-ஐ பின்தொடரும் வலிமை.! இந்த முடிவு சரியா வருமா?!

அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசாக வேண்டிய திரைப்படம் வலிமை. ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திரைப்படம் ரிலீசாகவில்லை. பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அதேபோல பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக வேண்டியது. ஆனால், அதுவும் பல காரணங்களால் அன்றைய தேதியில் ரிலீஸ் ஆகாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இவ்வாறு தள்ளி வைக்கப்பட்ட பெரிய படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும்.? மேலும் ஏப்ரல்-மே காலகட்டத்தில் ரிலீசாக உள்ள பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நிலைமை என்னவாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்களேன்… சிவகார்த்திகேயனை உதறி தள்ளிய இளம் இயக்குனர்.! முழு காரணம் சிம்பு மட்டும் தான்.!
இதில், RRR திரைப்படம் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து விட்டது. தற்போது, அதே பாணியை வலிமை படக்குழுவும் பின்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 என இரு தேதியை வலிமை படக்குழுவும் உறுதி செய்துள்ளது எனவும், விரைவில் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.