எனக்கு கல்யாணமே வேணாம்! நாய்களுடனே தன் முழு நேரத்தையும் செலவிடும் நடிகைகள்
சினிமாவில் பெரும்பாலும் பிரபலங்கள் பலரும் தன் பொழுது போக்கிற்காக ஏதாவது ஒரு பிராணியை தன் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். அதிலும் சமீபகாலமாக பல நடிகைகள் தன்னுடைய செல்லப்பிராணிகளை தன் சூட்டிங் ஸ்பாட்டிற்கே கொண்டு வருகிறார்கள். அப்படி நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நடிகைகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.
கீர்த்தி சுரேஷ்: இதற்கெல்லாம் உச்சமாக கீர்த்தி சுரேஷை கூறலாம். எங்கு போனாலும் சரி எந்த நாட்டில் சூட்டிங் இருந்தாலும் சரி போற இடத்துக்கெல்லாம் தான் வளர்க்கும் நாயை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். சினிமாவை தவிர்த்து தன் முழு நேரத்தையும் நாயுடனேயே கழித்து வருகிறார்.
இதையும் படிங்க : ‘கைதி 2’க்கு சொந்த அண்ணனே எமனா வந்த கொடுமை! சூர்யாவின் விருப்பத்தை நிறைவேற்றிய கார்த்தி
வரலட்சுமி : இந்த அம்மணியும் அதே போலதான். பீஜ்ஜில் தன் செல்ல நாயுடன் விளையாடுவது போல வீடியோவை சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஏதோ ஒரு பீஜ்ஜில் தன் குட்டி நாயுடன் விளையாடும் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.
ராஷ்மிகா மந்தனா: ஔரா என்ற பெயரிடப்பட்ட தன் செல்ல நாய்தான் ராஷ்மிகாவுக்கு தோழனாம். தன் முழு நேரத்தையும் அதனுடனயே செலவிட்டு வருகிறார். கொரனா காலத்தில் கூட அந்த ஔராதான் தனக்கு பொழுது போக்காக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
த்ரிஷா : இவரும் செல்லப்பிராணியாக நாயைத்தான் வளர்க்கிறார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கெல்லாம் தூக்கிக் கொண்டு செல்லமாட்டார். ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பும் போது இது தான் எல்லாமே த்ரிஷாவுக்கு.
இதையும் படிங்க : விஜய், அஜித்தை ஓரங்கட்டி ரியல் ஸ்டாராக நிற்கும் ஷாரூக்கான்! ‘ஜவான்’ படத்தால் நிகழப்போகும் அதிசயம்
அனுஷ்கா: அனுஷ்காவும் ஒரு நாய் பிரியைதான். சினிமா போக மற்ற நேரங்களை தான் வளர்க்கும் நாயுடன் தான் செலவிடுகிறார். நடிகர்களை விட நடிகைகள்தான் நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். இப்படியே தன் வாழ்க்கையை கழித்து விடுவோம் என்று எண்ணி விட்டார்களோ தெரியவில்லை.