பெரிய ஹீரோக்கள்.. தரமான சம்பவம்! இனிவரும் தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்கள்

kamal
Big Buget Movies: தமிழ் சினிமாவில் நாள்தோறும் புதுபுது அப்டேட் வந்து கொண்டே இருக்கின்றன. யாரும் எதிர்பாராத வகையில் புதுமையான தகவல்களை அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்திருக்கிறார் சூர்யா.
அதுவரை விஜயின் 69வது படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும் என்ற பேச்சுதான் அடிப்பட்டுக் கொண்டு வந்தது. ஆனால் திடீரென சூர்யாவின் படத்தை இயக்கப் போகிறார் கார்த்திக் சுப்பாராஜ். இதை போல் இனிவரும் நாள்களில் தமிழ் சினிமாவில் தரமான சம்பவங்களை செய்ய முன்னனி நடிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சத்தியராஜ் நடித்து வெளிவராத திரைப்படங்களின் லிஸ்ட்!.. அட இவ்வளவு படமா?!…
அஜித், விஜய், ரஜினி, கமல் என இவர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. எந்தெந்த படங்கள் யார் இயக்க போகிறார்கள் என்ற செய்தியைத்தான் பார்க்க இருக்கிறோம். அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு புதிய ஆக்ஷன் படத்தை எடுக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கு குட் பேட் அக்லி என்ற பெயரும் வைத்துவிட்டார்கள். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள்.
சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படமும் ரிலீஸ் பட்டியலில் காத்துக் கொண்டிருக்கின்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: சண்டைக்கு தயாரான முத்து… இருந்த கட்டுப்பாடு எல்லாம் காணாம போச்சோ… அட போச்சா!
ஏற்கனவே கமல் மணிரத்தினம் கூட்டணியில் தக் லைஃப் படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக கமலின் 237வது படத்தை அன்பறிவு இயக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் பட்டியலில் காத்துக் கொண்டிருக்கிறது. மிக அதிகளவு எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் என்றால் கோட். விஜய் நடிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். எப்படியும் இந்த கோட் திரைப்படம் அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அடுத்ததாக ரஜினி 171 திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. இது கண்டிப்பாக ஒரு பக்கா ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடைசியாக நேற்று வெளியான அறிவிப்பின் படி சூர்யா 44 படமும் இந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. இதை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார். அடுத்த வருடம் ரசிகர்களுக்கு ஒரு செமையான ட்ரீட்டாக இருக்கும் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: அஜித்துக்கு இந்த விஷயத்துல கோபம் அதிகமா வரும்! மாட்டிக்கிட்டு முழித்த டெக்னீசியன்கள்