Cinema News
இப்பதான் பணக்காரனா ஃபீல் பன்றேன்னு சொன்னதுக்கு பின்னால இவ்வளவு இருக்கா!.. அந்த சம்பவம்தான் காரணமாம்…
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். இவர் தமிழை தவிர கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளிலும் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் பேருந்து நடத்துனராய் இருந்த ரஜினிகாந்த் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினல் சினிமாவில் அயராது உழைக்க ஆரம்பித்தார்.
பின் 16 வயதினிலே, பில்லா, பொல்லாதவன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஸ்டைலுக்கே பல ரசிகர் பட்டாளம் உண்டு. தில்லுமுல்லு திரைப்படத்தில் இவரின் காமெடி கலந்த நடிப்பு இவர் எல்லா கதாபாத்திரத்திற்கும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்தது. பின் சந்திரமுகி, எந்திரன் போன்ற திரைப்படக்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.
இதியும் படிங்க:ஒருநாள் எல்லாரும் என்னை தேடி வருவாங்க!. அப்ப இருக்கு!.. சொன்னதை செய்து காட்டிய அஜித்!..
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன் லால் போன்ற பல முன்னணி பிரபலங்களும் நடித்திருந்தனர். இப்படம் பல கோடி அளவில் வசூலில் சாதனை படைத்தது.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் இப்படத்தில் நடித்த ரஜினி, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் போன்றவர்களுக்கு பட வெற்றியை கொண்டாடும் விதத்தில் விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கினார்.
இப்படத்தில் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அதில் பேசிய ரஜினி கலாநிதிமாறன் கொடுத்த காரில் சென்ற போதுதான் உண்மையான பணக்காரனாக உணர்ந்தேன் என குறிப்பிட்டார். இவ்வாறு இவர் கூறியதற்கு பின் ஒரு காரணமும் உள்ளது.இவர் 16 வயதினிலே படத்தில் நடிப்பதற்கு முன் இன்கம்டேக்ஸ் கிருஷ்ணமூர்த்தி என்ற தயாரிப்பாளரின் கீழ் படத்தில் நடித்துள்ளார். அப்போது அவரிடம் 7500ரூபாய் சம்பளத்திற்கு படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். அப்போது அவரது வீடு வாடகை மற்றும் இதர செலவுக்காக 5000 ரூபாயை முன்கூட்டியே வாங்கி கொண்டாராம்.
இதியும் படிங்க:போட்டினு வந்துட்டா நண்பனாவது மண்ணாங்கட்டியாவது – கரிகாலனோடு நேரடியாக மோதும் வந்தியத்தேவன்
அந்த சமயத்தில் அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரை காண வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளரிடம் மீதியுள்ள பணத்தில் 2000ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளார் டப்பிங் பேசினால்தான் மீதியுள்ள பணத்தினை தரமுடியும் என கூறியுள்ளார்.
என்ன செய்வது என்று யோசித்த ரஜினி தந்து சொந்த இருசக்கர வாகனத்தினை விற்று அந்த தொகையை வைத்து தனது அம்மாவை காண சென்றுள்ளார். இவ்வாறு நடப்பது நடிகர்கள் வாழ்வில் சகஜமான விஷயம்தான் என்றாலும் ரஜினி தற்போது இப்போதுதான் பணக்காரனாய் உணர்கிறேன் என கூறியிருப்பது அவர் இந்த வயதிலும் ஜெயிலர் திரைப்படத்திற்கு போட்ட உழைப்பை காட்டுகிறது. தான் அப்போது கஷ்டப்பட்டு உழைத்தாலும் இப்படத்தில் உழைத்து அதற்கு வெகுமதியாய் இக்காரை வாங்கியதால் அதனை உணர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதியும் படிங்க:பாலாவுக்கே இப்படினா அதுல நடிக்கிறவங்க நிலைமை?!… தயாரிப்பாளர் தலைல துண்டு விழாம இருந்தா சரிதான்…