அண்ணன் தம்பி பொங்கலா? இல்ல.. அண்ணனும் தம்பியும் பொங்குறாங்களா? இப்படியொரு உள்குத்தா?

Published on: January 5, 2026
siva (9)
---Advertisement---

இந்த பொங்கல் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத பொங்கலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பக்கம் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படமும் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கின்றன. இதற்கு முன் எத்தனையோ பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இந்த போட்டியை ஒரு அரசியல் போட்டியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

பராசக்தி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இன்பநதி தயாரிப்பில் அந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் உதயநிதி தரப்பிலிருந்து ஜனநாயகன் திரைப்படத்திற்கு மறைமுகமாக பல பிரச்சனைகளை கொடுக்கும் விதமாக தான் சில வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் அடுத்த நாளே பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு அரசியல் தான் என்று சொல்லப்படுகிறது .

இந்த போட்டியில் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அது எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய சில விஷயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அதாவது இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கலாக இருக்கட்டும். ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து அனைவரும் செலிபிரேட் பண்ணுங்கள். விஜய் சாருக்கு இது கடைசி படம் என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால் அதற்குப் பின்னணியில் சில உள்குத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது .

இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய சேனலில் சில கருத்துக்களை பேசியுள்ளார். கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அதை சாதுரியமாக சமாளித்து விட்டார் சிவகார்த்திகேயன் .பராசக்தி இசை மேடையில் அவர் பேசிய சில விஷயங்களில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அதாவது கோட் திரைப்படத்தில் முக்கியமான காட்சியில் முக்கியமான வசனத்தை கொடுத்து சிவகார்த்திகேயனுக்கு என ஒரு அங்கீகாரத்தை கொடுத்து வைத்திருந்தார் விஜய்.

அதிலிருந்து சிவகார்த்திகேயனின் மவுசும் அதிகமாகிவிட்டது. அந்த படத்தின் பொழுது சிவகார்த்திகேயனுக்கு விஜய் நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது .இப்படி நேரடியாகவே விஜயும் சிவகார்த்திகேயனும் பேசும் சூழ்நிலை இருக்க ஏன் சிவகார்த்திகேயன் விஜயின் மேனேஜரை அழைத்து பராசக்தி ரிலீஸ் குறித்து பேச வேண்டும்? அதை நேரடியாகவே விஜயிடம் பேசியிருக்கலாமே .அப்போ இவர் மனதில் ஏதோ ஒரு சஞ்சலம் இருக்கப் போய் தான் விஜயிடம் அவர் நேரடியாக பேசவில்லை.

அதேபோல விஜய் சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்னதாகவும் மேனேஜர் சொல்லி இருந்ததாக சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். அதையும் விஜய் நேரடியாகவே சிவகார்த்திகேயனை வர சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கலாம். அதை விஜயும் செய்யவில்லை. அப்போ விஜய் மனதிலும் ஏதோ சில கோபம் இருக்குதானே? உண்மையிலே இது அண்ணன் தம்பி பொங்கலா? இல்லை தனித்தனியாக அண்ணனும் தம்பியும் பொங்குகிறார்களா என்று தெரியவில்லை என அந்தனன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.