லியோவுக்கு அடுத்த ஆப்பு!.. அதிகாலை காட்சி இல்லை!. முதல் காட்சி நேரம் இதுதான்!..

Leo fdfs: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. இப்படம் வருகிற 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்திற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
பொதுவாக விஜய், அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள் வெளியானால் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியை தியேட்டரில் திரையிடுவார்கள். இதில், டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பார்கள். இதில், நன்றாக கல்லா கட்டுவார்கள். எத்தனை ஆயிரம் என்றாலும் விஜய் ரசிகர்கள் டிக்கெட் கொடுத்து அதை வாங்க வெறியோடு காத்திருப்பார்கள்.
இதையும் படிங்க: திரிஷாவால் லியோவுக்கு வந்த ஏழரை!.. இன்னும் எத்தனதான் வச்சிருக்கீங்க சொல்லுங்கடா!…
ஏனெனில், முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பது என்பது அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம். அதில் அவர்களுக்கு பெருமையும் கூட. எனவே, லியோ படத்திற்கும் அப்படி அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், ஒரு மாதமாகியும் அரசு அனுமதி தராமல் இழுத்தடித்துகொண்டே இருந்தது.
அதன்பின் 2 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த அறிவிப்புல் அதிகாலை காட்சிக்கு உண்டா?. முதல் காட்சி எத்தனை மணிக்கு திரையிடலாம்? என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதையும் படிங்க: அங்கயும் மிரட்டுனாங்க! பிரச்சினை வராத நாளே இல்ல போல – லியோ படத்தில் பட்ட வேதனையை பகிர்ந்த இயக்குனர்
ஆனாலும், அதிகாலை 5 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளித்துவிட்டது என பலரும் ஊடகங்களில் பதிவிட துவங்கினார். விஜய் ரசிகர்களும் அதை நம்பி மகிழ்ச்சியடைந்தனர். தற்போது அவர்களின் மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 காட்சிகள் திரையிடலாம். இதில் முதல் காட்சி 9 மணிக்கு துவங்கி கடைசி காட்சி இரவு 1.30 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு லியோ தயாரிப்பாளர் தரப்புக்கும், விஜய் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: லியோ படத்துலயே அந்த ரெண்டு பேரோட போர்ஷன் தெறிக்கவிடும்!.. இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட்!..