Cinema History
நடிகர்களையே பதம் பார்த்த ஒற்றை பாடல்வரி… சிக்கலிலிருந்து தப்பிக்க உதவிய வாலி…
Lyricist Vaali: வாலி தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் ஒருவர். இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 60 , 70களில் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு கவிஞர் இவர். இவரின் பாடல் வரிகளில் ஒரு உயிரோட்டம் இருக்கும். இன்று வரை இவரின் பாடல் வரிகளுக்கு ரசிகர்கள் உள்ளனர்.
பொதுவாக சினிமாவில் சில மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். பாடல் வரிகளில் அது பிரதிபலிக்கும். அப்படிதான் வாலியின் வாழ்விலும் நடந்துள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே பல முறை இந்த மாதிரியான பிரச்சினைகளை சந்தித்துள்ளதால் இதற்கான வழியையும் அவரே கொடுத்துள்ளார்.
இதையும் வாசிங்க:நான் அப்படி செஞ்சிருக்கவே கூடாது! அத்தனை பேர் இருக்கிற இடத்துல விஜயை உதாசீனப்படுத்திய நடிகர்!
1965ஆம் ஆண்டு இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பூஜைக்கு வந்த மலர். இப்படத்தில் ஜெமினிகணேசன், முத்துராமன், சாவித்ரி, மணிமாலா, நாகேஷ் போன்ற பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் வரும் பாடல்தான் கால்கள் நின்றது நின்றதுதான் பாடல்.
இப்பாடலை பாடலாசிரியர் வாலி தான் எழுதினார். இப்பாடல் எழுதி முடித்தபின் லொக்கேஷன் மேனேஜர் இப்பாடலுக்கு ஏற்ற சரியான இடத்தினை பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்தாராம். ஆனால் வரும் வழியிலேயே இவருக்கு விபத்து ஏற்பட்டு ஒரு காலில் அடிபட்டு விட்டதாம். பின் அவர் பார்த்து வைத்த அந்த இடத்தில் நடிகர் முத்துராமன் மற்றும் மணிமாலாவை வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் அப்போது முத்துராமனுக்கு காலில் அடிபட்டு விட்டதாம். பின் அவர் சில நாட்கள் படப்பிடிப்புக்கு வரமுடியாமல் ஆகிவிட்டதாம். என்ன செய்வது என தெரியாமல் நின்ற படக்குழு அப்பாடலுக்கு ஜெமினி கணேசன் சாவித்ரியை வைத்து பாடலாக்கலாம் என நினைத்து பாடல் காட்சிகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அப்போது சாவித்ரிக்கு காலில் அடிபட்டுவிட்டதாம். பின் அவரும் என்னால் சில காலம் படப்பிடிப்புக்கு வர முடியாது என கூறிவிட்டாராம்.
இதையும் வாசிங்க:பாலா முன்னாடி மீசையை முறுக்கிட்டு நின்னா சும்மா விடுவாரா? படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட நிலைமை
அந்த நேரம் முத்துராமனின் கால்கள் சரியாவிட்டதாம். எனவே படக்குழு அவரை காரில் பத்திரமாக அழைத்து வந்து கொண்டிருக்கும்போது கார் வழியில் ஒரு சிறுமியின் மீது இடித்து விட்டதாம். அந்த சிறுமிக்கு காலில் அடிபட்டுவிட்டதாம். அதனால் படக்குழுவினர் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று விட்டனராம். அப்போது இயக்குனர் ஒரு பாடல் காட்சிதானே எடுக்க நினைத்தேன். அது என்னை இன்று போலிஸ் ஸ்டேஷன் வரை கொண்டுவந்துவிட்டதே என வருத்தப்பட்டுள்ளார்.
இதை அறிந்த வாலி ஒரு வேளை நாம் எழுதிய பாடல் வரிகளால்தான் இப்படியெல்லாம் நடக்கின்றதோ என எண்ணி ஒரு யோசைனையை படக்குழுவிற்கு கூறியுள்ளார். பாடலின் பல்லவியில் கால்கள் நின்றது நின்றதுதான் என எழுதியுள்ளேன். இது எனக்கு அறச்சொல்லாக தோன்றுகிறது. அதனால் நீங்கள் சரணத்திலிருந்து படபிடிப்பை ஆரம்பியுங்கள் என கூறினாராம். பின் அதுபடியே படபிடிப்பும் வெற்றிகரமாய் நடந்து முடித்ததாம்.
இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..