மீனாவா.? வேண்டவே வேண்டாம்.! கமலுக்கு ரேவதி போதும்.! இதெல்லம் பிளாக் பஸ்டர் சீக்ரெட்ஸ்..,

by Manikandan |
மீனாவா.? வேண்டவே வேண்டாம்.! கமலுக்கு ரேவதி போதும்.! இதெல்லம் பிளாக் பஸ்டர் சீக்ரெட்ஸ்..,
X

தமிழ் சினிமாவில் இந்த நடவடிக்கை தற்போது வரை இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அதாவது ஒரு படத்தில், குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு இவர்கள் சரியாக இருப்பார்கள் என கூறி, அதன் பிறகு படமாக்கப்படும் போது இது சரியாக வராது என மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அப்படி பல்வேறு திரைப்படங்களை நாம் சொல்லலாம். இது விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுக்கே நடந்துள்ளதாம். 1992ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி தற்போது வரை சிறந்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது தேவர் மகன்.

இந்த படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசன் எழுதி இருந்தார். பரதன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் கமலுக்கு இரண்டு நாயகிகள். ஒன்று கௌதமி, இன்னொரு ஹீரோயின் ரேவதி. ரேவதி தான் சூழ்நிலை காரணமாக கமலை திருமணம் செய்துகொள்ளும்படி ஆகிவிடும்.

இதையும் படியுங்களேன் - அறிமுகம் கொடுத்தவருக்கே அல்வா கொடுத்த விஜய் சேதுபதி.! யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்டு.!

ஆனால், ரேவதிக்கு பதில் முதலில் படத்தில் கமிட் ஆனது மீனாவாம். முதலில் மீனா காட்சி படமாக்கப்ட்டட போது அதில் படக்குழுவுக்கு திருப்தி இல்லையாம். மீனா முகத்தில் அந்த கிராமத்து முதிர்ச்சி இல்லையாம். சின்ன பெண் போலவே இருந்ததால் அவர் நீக்கப்பட்டு, பின்னர் தான் ரேவதி கமிட் ஆகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Next Story