போனதும் சேலைய பிடிச்சு இழுத்து! கலைஞர் பேர் சொன்னதும் கதிகலங்கிய கும்பல்.. யார் அந்த நடிகை?

by Rohini |
sharmila
X

sharmila

Actress Sharmila:சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஹேமா கமிட்டியின் அறிக்கையை பற்றி தான். மலையாள சினிமாவில் இந்த ஹேமா கமிட்டி மூலம் பல நடிகர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாலியல் ரீதியாக நடிகைகளை டார்ச்சர் செய்வதாக கூறி பல நடிகைகள் இந்த கமிட்டியின் மூலம் புகார் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகை ஷார்மிளா அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது தமிழில் காலம் மாறி போச்சு என்ற படத்தின் ரீமேக்கை மலையாளத்தில் எடுத்தார்களாம். அப்போது ஒரு பாடல் காட்சி மட்டும் பொள்ளாச்சியில் எடுக்க வேண்டி இருந்ததாம்.

இதையும் படிங்க: பேமெண்ட் வரலையா…கோட் படத்தை கண்டப்படி துப்பி வச்சிருக்காரே… பாண்டா பிரசாந்த்

பொள்ளாச்சியில் மூன்று நாட்கள் ஷூட்டிங் இருந்ததாம். முதல் இரண்டு நாட்கள் எப்போதும் போல படப்பிடிப்பை நடத்தி முடிக்க மூன்றாவது நாளில் ஒட்டுமொத்த பாடல் காட்சியையும் படமாக்கி விட்டு பேக்கப் செய்து இருக்கிறார்கள். அப்போது ஷார்மிளா தனது உதவியாளரிடம் தனக்கு கார் வந்து விட்டதாக கூறி கிளம்புகிறேன் என சொல்லி கிளம்பி இருக்கிறார்.

உடனே அந்த உதவியாளர் தயாரிப்பாளர் மேலே இருக்கிறார். அவரிடம் சொல்லிவிட்டு வாருங்கள் என சொன்னாராம். உடனே ஷார்மிளா தன்னுடைய மேனேஜர் ஒருவர் மற்றும் தனது அக்கா என மூன்று பேராக தயாரிப்பாளர் தங்கி இருந்த அறைக்குள் சென்று இருக்கின்றனர்.

அப்போது அந்த தயாரிப்பாளர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு முழுவதுமாக மது குடித்திருந்தாராம். இவர்கள் கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒரு நான்கு பேர் வெளியே வர அதில் ஒருவர் என்ன ஏது என்று கூட கேட்காமல் ஷார்மிளா அருகில் இருந்த அவருடைய அக்காவின் சேலையை உருவி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கார்த்திக்கு பதில் ஜெய் நடிச்சிருந்தா படம் ஹிட்டாகியிருக்கும்! உண்மைதான்

அந்த தயாரிப்பாளர் ஷார்மிளாவை புடிச்சி உள்ளே இழுத்து இருக்கிறார். உடனே சார்மிளா அவருடைய கையை கடித்துவிட்டு வெளியே சில ஆட்டோக்காரர்கள் இருந்தார்களாம். அவர்களிடம் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் அவர்கள் தயங்க பொள்ளாச்சியில் பிரபலம் ஒருவரின் பெயரைச் சொல்லி அவரும் எங்கள் குடும்பமும் உறவினர்கள் தான் என்று சொன்ன பிறகுதான் அந்த ஆட்டோக்காரர்கள் உள்ளே போயிருக்கிறார்கள்.

அதன் பிறகு ஷார்மிளா அவருடைய தந்தைக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார். அப்போது அவருடைய தந்தையும் கலைஞரும் மிகவும் நெருக்கமாம். அதனால் உடனே ஊரிலிருந்து ஷார்மிளாவின் தந்தை நேராக கலைஞர் வீட்டுக்கு போன் செய்து ராஜாத்தி அம்மாளிடம் தனது மகள் இப்படி மாட்டிக் கொண்டார் என்ற விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

sharmila 1

sharmila 1

இதையும் படிங்க: இவ்ளோ கஷ்டப்பட்டும் ரசிகர்களுக்கு பிடிக்காம போயிடுச்சே!.. கோட்-டில் கோட்டைவிட்ட வி.பி!..

உடனே ஷார்மிளா திரும்பவும் அவருடைய அறைக்கு செல்ல அங்கிருந்தவர்கள் இன்று இரவு இரவு மட்டும் தங்கிக் கொள்ளுங்கள். நாளை காலையில் நீங்கள் ஊருக்கு புறப்படலாம். நாங்கள் இங்கே இருக்கிறோம் என சொல்லி இருக்கிறார்கள். அதை நம்பி சார்மிளாவும் அவருடைய அறையில் போய் தங்கி இருக்கிறார்.

காலை விடிந்ததும் ஷார்மிளாவுக்கு ஒரே பயம். அந்த ஆட்கள் போய்விட்டார்களா? இல்லையென்றால் மறுபடியும் வந்து சில்மிஷம் செய்வார்களா என்ற பயத்தில் கதவை திறக்க வெளியில் நிறைய போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்களாம்.

பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகளும் இருக்க ஷர்மிளாவுக்கு தொல்லை கொடுத்த அந்த கும்பலை போலீஸ்காரர்கள் கைது செய்து தக்க தண்டனையும் கொடுத்ததாக அந்த பேட்டியில் ஷர்மிளா சொல்லி இருக்கிறார். இதில் ஷார்மிளாவுக்கு பெயர் வைத்ததே கலைஞர் தானாம். அந்த அளவுக்கு ஷார்மிளாஅவின் அப்பாவும் கலைஞரும் நெருக்கம் என கூறி இருக்கிறார்.

Next Story