More
Categories: Cinema News latest news television news

அடுத்த ஆதி குணசேகரனுக்கு இவர்கிட்டதான் பேசுறாங்களாம்!.. அப்போ இனி சீரியல் தீயாய் இருக்குமே!.

தமிழ் சீரியல்களில் டி.ஆர்.பியில் முதலிடம் பிடித்த சீரியல்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலை இதற்கு முன் இதே தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலான கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார்.

பெண் சுதந்திரம் அதே சமயம் அதனை அழகான குடும்ப பாங்கான கதையில் சொல்வது இவரின் தனித்துவம். இந்த சீரியல் இப்போது உள்ள அனைத்து சீரியல்கலையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க: இந்த வயசுல இவ்வளவு பேராசை ஆகாதுமா..கமல் கூட நடிக்க இதுதான் காரணம்..அபிராமியின் பளிச் டாக்..

வழக்கம் போல் இல்லாமல் மாறுபட்ட கதை களத்தோடு இந்த சீரியல் பயணிக்கிறது. இந்த சீரியலுக்கென ரசிகர் பட்டாளமும் அதிகம்தான். இப்படிப்பட்ட சீரியலுக்கு இயக்குனர் ஒரு தூண் என்றால் இதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றொரு தூண்.

இந்த சீரியலில் பாம்பே ஞானம், மாரிமுத்து, கமேலேஷ் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் மாரிமுத்து நெஞ்சுவலி காரணமாக கடந்த வாரம் மரணமடைந்தார் என்பது நாம் அறிந்ததே.

இதையும் வாசிங்க: என்ன செல்லம் பொசுக்குன்னு காட்டிப்புட்ட!.. வயசு பசங்க மனச கெடுக்கும் திவ்யா துரைசாமி…

இத கேட்ட ரசிகர்களும் திரையுலகினரும் மற்றும் சீரியலில் இவருடன் பணியாற்றுபவர்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர். இவரின் இழப்பை இப்போது வரை யாராலும் தாங்கி கொள்ளா முடியவில்லை. இவர் நிஜத்தில் சிறந்த ஒரு மனிதர்.

தற்போது இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்க என்று படக்குழு யோசனையில் உள்ளது. நடிகர் வேலராமமூர்த்தியை இக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் தனக்கு நிறைய படங்கள் இருக்கிறது என்று கூறியதால் படக்குழு தற்போது பிரபல சினிமா வில்லனான பசுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் திருப்பாச்சி, விருமாண்டி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க: இளையராஜாவுடன் பணிபுரிந்த ‘எதிர்நீச்சல்’ பிரபலம்! வெளிவந்த தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்

மேலும் இந்த முடிவினை இயக்குனரே எடுத்ததாகவும் மற்றும் பசுபதி ஆதி குணசேகரனை போல் நன்கு நடிப்பு திறமை கொண்டவராகவும் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் ஏற்புடையவராக இருப்பார் என்பதாலும் இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆதி குணசேகரனுக்கு பதி பசுபதியை நடிக்க வைத்தால் தொடர்ந்து சீரியல் முதலிடத்தை பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Published by
amutha raja

Recent Posts