விஜய் இருந்ததால் மட்டுமே இது சாத்தியம்.! பீஸ்ட் இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு.!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி என பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து, ரிலீசுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை ஏப்ரல் 14இல் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.
தற்போது ரசிகர்களுக்கு சன் பிக்ச்சர்ஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் வரும் என தற்போது அப்டேட்க்கு அப்டேட் விட்டு சன் பிச்சர்ஸ் தெறிக்க விட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை என்ன அப்டேட் வர போகிறதோ என ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இயக்குனர் நெல்சன் ஒரு பேட்டியில், பீஸ்ட் படம் குறித்து பேசினார். அதாவது அவர் பேசுகையில், பீஸ்ட் படமானது நடிகர் விஜயை மனதில் வைத்து அவருக்கு ஆகவே இப்படத்தை எழுதினேன். அவர், இப்படத்தில் நடிக்கவிட்டால் இப்படம் எடுத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன்-
இது தான் உண்மையான பீஸ்ட் மூடு.! கொண்டாட்டத்தின் உச்சியில் தளபதி ரசிகர்கள்.! |
ஆம்.. அவர் நடித்திருந்தால் மட்டுமே பீஸ்ட் படம் முழு பூர்த்தியை அடைந்திருக்கும். அதே போல் தான், டாக்டர் திரைப்படமும் சிவகார்த்திகேயனை வைத்து தான் அப்படம் எழுதப்பட்டது. அப்படத்திலும் அவர் நடிக்காவிட்டால் எடுத்திருக்க முடியாது. இதெல்லாம், அவர்களுக்கு ஆகவே எழுதப்பட்ட கதைகள் என்று கூறினாராம்.