ராஜா போட்ட பாட்டிலேயே ரஜினியின் ஆல்டைம் ஃபேவரைட் இதுதான்!.. அட அது செம பாட்டாச்சே!..
70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது வரை இசைஞானியாக வலம் வந்து கொண்டிருப்பவர் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கினார். தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை கேட்டிராத மண் வாசனை கொண்ட இசையை கொடுத்தார்.
இளையராஜா வந்த பின்னர்தான் கிராமத்திய இசையின் மகிமையே ரசிகர்களுக்கு தெரிய வந்தது. பாரதிராஜாவின் இசையில் ராஜா கொடுத்த பாடல்கள் அனைத்தும் கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை கண்ணாடி போல காட்டியது. இளையராஜாவின் இசையாலேயே பல திரைப்படங்களும் வெற்றி அடைந்தது.
இதையும் படிங்க: எனக்கே ஸ்கெட்ச்சா? தளபதியை ஓவர் டேக் செய்த ரஜினிகாந்த்… கூலி படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், கார்த்திக் என பல நடிகர்களுக்கும் இளையராஜா இசையமைத்தார். பல இனிமையான பாடல்களை கொடுத்தார். 80களில் வெளியான ரஜினியின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு ராஜாதான் இசையமைத்தார். பல ஹிட் பாடல்களை கொடுத்தார்.
ஆனால், ஒருகட்டத்தில் சம்பள விஷயத்தில் இளையராஜா கறார் காட்ட, ரஜினி சமாதானம் பேசப்போய் ராஜாவின் கோபத்திற்கு ஆளானார். அதன்பின் தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என ரூட்டை திருப்பிவிட்டார் ரஜினி. கடந்த 30 வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு ராஜா இசையமைக்கவில்லை.
இதையும் படிங்க: விஜய்யை விட வேகமா இருக்காரே ரஜினிகாந்த்!.. அந்த வேலையை அதுக்குள்ள முடிச்சிட்டாராம்!..
ஆனால், ராஜாவின் மீதுள்ள மரியாதை ரஜினிக்கு குறையவில்லை. ராஜா தனியாக ரிக்கார்டிங் தியேட்டர் கட்டியபோது அங்கு சென்று அதை பார்த்துவிட்டு, ராஜாவை சந்தித்துவிட்டு வந்தார் ரஜினி. இந்நிலையில், மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரசாந்தினி ஊடகம் ஒன்றில் பேசியபோது பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ராஜாவின் இசையில் ரஜினிக்கு என் அப்பா பல பாடல்களை பாடி இருக்கிறார். அதில், முரட்டுக்காளை படத்தில் இடம் பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல் ரஜினி சாரின் ஆல்டைம் ஃபேவரைட். இதுவரை அந்த பாடலை அடிக்க மற்றொரு ஃபோக் சாங் வரவில்லை. மேலும், ரஜினி சாருக்கு ‘தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு.. பொதுவாக என் மனசு தங்கம்.. வா வா வசந்தமே’ என பல மெலடிகளையும் அப்பா பாடி இருக்கிறார்’ என பிரசாந்தினி கூறினார்.