விஜயகாந்த் இத செஞ்சிருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது! மிஸ் பண்ண வருத்தத்தில் ரசிகர்கள்

Published on: December 15, 2023
viji
---Advertisement---

Captain Vijayakanth:  நீண்ட நாள்களுக்கு பிறகு அதுவும் மருத்துவமனையில் உடல் நலம்  பெற்று முதன் முறையாக நேற்றுத்தான் விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ரசிகர்களை பார்த்து ரசித்தார். ஆனால் வந்த ரசிகர்களாகட்டும் கட்சி நிர்வாகிகளாகட்டும் விஜயகாந்தை பார்த்து கண்ணீர் வடித்ததுதான் மிச்சம்.

விஜயகாந்தை நேரில் பார்த்தாலும் கம்பீரமான தோற்றம், கர்ஜிக்கும் வசனம் என எதுவும் இல்லாத கேப்டனாகத்தான் பார்க்க முடிந்தது. எப்படி பார்த்த கேப்டனை இப்படி உட்காரவச்சிட்டாரே கடவுள் என வந்த நிர்வாகிகள் சிலர் கடவுளை கடிந்து கொண்டதை பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: ப்ரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் படத்தின் கதை தானா..? இது அது இல்ல..! கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிரம்மாண்டமாக நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் இடத்தை அவரது மனைவி பிரேமலதா பிடித்துக் கொண்டார். பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.

ஆனால் கையசைக்கக் கூட முடியாத அளவில் தான் ஒரு பொம்மையாக காணப்பட்டார் விஜயகாந்த். இது குறித்து ஒரு சில பிரபலங்கள் கூட விஜயகாந்திற்கு இனிமேல் முழுமையான ஓய்வுதான் தேவைப்படுகிறது. அவரை இப்படி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இனிமேல் பொது இடங்களில் அழைத்துவந்து அவரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என அவரவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதையும் பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: வாய்ப்பு வாங்க சந்திரபாபு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. அட அவர் அப்பவே அப்படித்தான்!..

இந்த நிலையில் விஜயகாந்த் இப்படி ஆனதற்கு காரணமே பிரேமலதாதான் என்றும் அவர் நடிகை ராதிகாவையே திருமணம் செய்திருந்தால் இந்தளவு விஜயகாந்த் இருந்திருக்க மாட்டார் என்றும் இன்னும் பெரிய இடத்திற்கு வந்திருப்பார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆரம்பகாலங்களில் விஜயகாந்துடன் ராதிகா அதிக படங்களில் நடித்தார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலித்து வந்ததாகவும் ஒரு சில காரணங்களால் அவர்கள் பிரிந்து விட்டனர் என்றும் அந்த பரபரப்பில் நடந்ததுதான் விஜயகாந்த் பிரேமலதா திருமணம் என்றும் பல செய்திகளில் வந்திருக்கின்றது.

இதையும் படிங்க: என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.