தெரியாம லவ் பண்ணி தொலைச்சுட்டேன்! - ஆண்ட்ரியாவை பிரிந்த சீக்ரெட்டை சொன்ன அனிருத்!..

by Rohini |   ( Updated:2023-09-07 08:53:31  )
ani
X

ani

Rock Star Aniruth: இன்று உலகம் முழுவதும் தன் இசையால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்தவர் இசையமைப்பாளர் அனிருத். சூப்பர் ஸ்டாருக்கு பிறகு ராக் ஸ்டார் என்ற பெரிய அந்தஸ்துடன் இந்த சிறு வயதில் அனைவரையும் பிரமிக்க வைக்கிறார். இன்று இருக்கும் பல முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இவர்தான் ராக் ஸ்டார்.

இவர் இல்லாமல் எந்த முன்னனி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆவதில்லை. அந்தளவுக்கு ஏ.ஆர்.ரகுமானையே மிஞ்சிக் கொண்டு வருகிறார் அனிருத். சமீபத்தில் ஜெய்லர் திரைப்படம் எந்தளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க : தோளுக்கு மேல பையன் இருக்கும் போது ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை! அந்த பாக்யலட்சுமி சீரியல் பிரபலமா?

ஜெய்லர் படம் மக்களை இந்தளவுக்கு சென்றடைந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அனிருத்தின் பின்னனி இசைதான். ஃபிரேமுக்கு ஃபிரேம் ரஜினிக்கு பிஜிஎம்மை போட்டு அனல் தெறிக்க வைத்திருப்பார்.

அடுத்ததாக லியோ, விடாமுயற்சி என இரு பெரும் தூண்களுக்கு தன் இசையை படைக்க காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமிபகாலமாக அனிருத்தின் திருமணம் பற்றிய ஒரு பேச்சு அடிக்கடி இணையத்தில் உலா வந்து கொண்டே இருந்தது.

இதையும் படிங்க: குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!

1000 கோடி சொத்துமதிப்புள்ள ஒரு அதிபரின் மகளைத்தான் அனிருத் திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி வெளியானது. இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒருவர் மிகப் பிரபலமாகி விட்டால் அவரை சுற்றி எப்பொழுதுமே ஒரு வதந்தியும் பரவ ஆரம்பிக்கும்.

அப்படித்தான் அனிருத்தை பற்றி சில சர்ச்சைகள் வெளியானது. கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் அனிருத் காதலித்தது ஆண்ட்ரியாதான். இது ஓரளவுக்கு அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர்கள் பிரிவுக்கான காரணம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?

இதையும் படிங்க: ஹெச்.வினோத் படத்துக்காக மீண்டும் துப்பாக்கி எடுக்கும் கமல்ஹாசன்!.. மெர்சலாக்கும் டிரெய்னிங் வீடியோ…

‘இது உண்மையான காதலா என்று சொல்ல முடியாது. ஆனால் நான் ஆண்ட்ரியாவை காதலிக்கும் போது எனக்கு வயது 19. ஆண்ட்ரியாவுக்கு வயது 25. இதுதான் எங்களுக்குள் இருந்த பிரச்சினை. அந்த வயதில் ஏதோ தெரியாம பண்ணிவிட்டோம். அப்படியே பிரேக் அப் ஆகிவிட்டது’ என்று அனிருத் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

Next Story