பீஸ்ட் படம் தோல்வியடைய காரணம் இவங்கதானாம்!.. ஒருவழியா வெளியே வந்த உண்மை!..

Published on: August 19, 2023
beast
---Advertisement---

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் தோல்வி குறித்து அப்படத்தின் தயாரிப்பு தரப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரே கிளைமேக்ஸ் காட்சியால் ட்ரோல் மெட்டரியலாகியது பீஸ்ட் படம். நெல்சன் திலீப்குமார் இப்படத்தினை இயக்கி இருந்தார்.

ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் கடத்தப்பட்ட அனைவரையுமே தீவிரவாதிகள் அடைத்து வைத்திருக்கின்றனர். அவர்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதே கதையாக இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் விஜயிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

Also Read

இதையும் படிங்க : நல்லா தூங்கி 10 வருஷம் ஆச்சி!.. அந்த பிரச்சனையால வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போச்சி.. கண் கலங்கிய டிடி

இப்படத்தின் குட்டை மனிதர் ஒருவரை வில்லனாக நெல்சன் போட்டு இருந்தார். இதை விட படத்தின் கிளைமேக்ஸ் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. பலரும் இதெல்லாம் சாத்தியமே இல்லை எனப் பலரும் கேலி பேசினார். இதை தொடர்ந்து நெல்சன் நெகட்டிவ் ரிவியூக்களால் நிறைய பெற்றார். நெல்சனை ஒரு தனியார் விருது நிகழ்ச்சியில் கூட யாரும் கண்டுக்காமல் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

இதை தொடர்ந்து ஜெய்லர் வெளியாகி நெல்சனுக்கு இருக்கும் மவுசு கோலிவுட்டில் அதிகரித்து இருக்கிறது. இதை தொடர்ந்து நெல்சன் கொடுத்த பேட்டிகளில் எல்லாம் பீஸ்ட்டுக்கும் அதிக நாட்கள் இருந்தால் நல்ல படமாக எடுத்து இருப்பேன். நாட்கள் கிடைக்காததால் தான் அப்படம் சரியாக வரவில்லை என்றார். ஆனால் அதிலும் உண்மையான காரணத்தினை கூறவில்லை.

இதையும் படிங்க: கடன் பிரச்னையால் முடங்கிய அயலான்… படத்தின் கதையும் இணையத்தில் கசிந்ததா?

இந்நிலையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், பீஸ்ட் தோல்விக்கு கண்டிப்பாக தளபதி விஜயோ, நெல்சன் திலீப் குமாரோ காரணம் இல்லை. படத்தினை ஏப்ரல் 14ந் தேதி வெளியிட வேண்டும் எனக் கூறி நாங்கள் தான் வேகமாக முடிக்க சொன்னோம். அதனால் தான் நெல்சன் அவசர அவசரமாக படத்தினை முடித்தார். இதனால் படத்தின் தோல்விக்கு தயாரிப்பு தரப்பான நாங்கள் தான் முழுக்காரணம் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்.