ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேட்கல.. ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கு இதுதான் காரணமா?
GV Prakash: இப்போது தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது மிகவும் சகஜமாகிவிட்டது. ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஒரு பக்கம் திரையுலகினர் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அடுத்ததாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி இவர்களின் விவாகரத்து பிரச்சனையும் இப்போது சூடு பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜீவி பிரகாஷ். இவரை இயக்குனர் வசந்த பாலன் தான் அறிமுகம் செய்து வைத்தார். ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஆன ரஹேனாவின் மகன்தான் ஜிவி பிரகாஷ்.
இதையும் படிங்க: கூலி படத்திலும் இது இல்லையா? அப்போ லோகேஷ் மறுபடியும் பார்முக்கு திரும்பிட்டாரோ…
இவர் தனது பள்ளி பருவத்தில் இருந்தே சைந்தவியை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் ஏராளமான படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் இசை, ஒரு பக்கம் நடிப்பு என மிகவும் பிசியாக வந்த ஜிவி பிரகாஷ் தற்போது தன் மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்திருக்கிறார்.
இருவரும் பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக நேற்று சோசியல் மீடியாவில் அவருடைய பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் இவர்களின் விவகாரத்துக்கு என்ன காரணம் என்பதை கூறியிருக்கிறார். அதாவது பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ் இந்த படங்களில் நடித்த நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாகவே நடித்திருப்பார். இதை பிடிக்காததால் கடந்த நான்கு வருடங்களாக சைந்தவிக்கும் ஜிவி பிரகாஷுக்கும் இடையே பிரச்சனை இருந்து கொண்டே தான் வந்ததாம். ஏ. ஆர் .ரகுமான் சொல்லியும் இவர்கள் சமாதானமாகவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையில் தான் இவர்களின் விவாகரத்து இப்போது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது
இதையும் படிங்க: வீட்டை வெளியே போக சொன்ன எழில்.. முடியாது என அடம் பிடிக்கும் கோபி… என்னங்க பாஸ் இப்படி?