அப்பவே வித்தியாசமான படங்களில் நடித்த மக்கள் நாயகன்!.. சாமானியன் படத்துல நடிக்க இதுதான் காரணமாம்!

by sankaran v |   ( Updated:2024-05-17 07:36:56  )
Ramarajan
X

Ramarajan

மக்கள் நாயகன் என்றாலே நமக்கு அவரது சூப்பர்ஹிட் பாடல்களும், டவுசர் போட்டு நடித்த படங்களும் தான் நினைவுக்கு வரும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் படத்தில் நடித்து வருகிறார் ராமராஜன். கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் மாதிரி சாமானியனும் பேசப்படும் என்கிறார் மக்கள் நாயகன் ராமராஜன். இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஒரு கதையைக் கேட்கும்போது 5 நிமிஷத்துக்குள்ள எனக்குத் தெரிஞ்சிடும். இந்தப் படத்துல நடிக்கலாமா, வேண்டாமான்னு. சமீபத்துல இந்த மாதிரி சப்ஜெக்ட் வரவே இல்ல. அதனால தான் நடிச்சேன். இன்ட்ரோவும் இதுவரைக்கும் யாருக்கும் வராத இன்ட்ரோ. இந்த விஷயத்தைக் கடக்காம யாரும் பொறந்து வளர்ந்து போக முடியாது. கிளைமாக்சும் முழு திருப்தி. படம் 100 பர்சன்ட் நிச்சயம் பேர் சொல்லும் என்கிறார் ராமராஜன்.

இதையும் படிங்க... ஃபுல் நைட் தூங்காம வேலை பார்த்த இசை அமைப்பாளர்!.. ஏ.வி.எம் லோகோ மியூசிக் உருவானது இப்படித்தான்!..

பணம் கொடுக்குறவங்க, வாங்குறவங்க என இந்த ரெண்டு பேருக்கு மத்தியில தான் உலகமே இயங்குது. அதைப் பற்றிப் பேசுற படம் தான் இது என்கிறார் படத்தின் டைரக்டர் ராகேஷ். அதுமட்டுமல்லாமல் ராமராஜன் ரசிகர்களுக்கு உள்ள பேவரைட்டான பல விஷயங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். பார்க்குற எல்லாருக்குமே மனசு உலுக்கிடும். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல மேக்கப் இல்லாம படம் நடிச்சிருக்கேன் என்கிறார் ராமராஜன். பார்த்தால் பசு படத்துல இளையராஜா மியூசிக் இருந்தும் பாட்டே கிடையாது. பைட்டே இல்லாத படம் இவர்கள் இந்தியர்கள் என அந்தக் காலத்திலேயே ராமராஜன் வித்தியாசமான பல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

இதையும் படிங்க... அஜித்துடன் சுசித்ரா எடுத்த பழைய செல்ஃபி!.. ஷேர் செய்து அசிங்கப்படுத்தும் விஜய் ரசிகர்கள்!..

எல்லா பாட்டும் ஹிட்டானா தான் படம் வெள்ளி விழா ஓடும். இது எந்த நடிகருக்கும் பொருந்தும். ராஜா சாரோட சாங் தான் இன்னைக்கும் நம்மளை வாழ வச்சிக்கிட்டு இருக்கு என்கிறார் மக்கள் நாயகன். அதுமட்டும் அல்லாமல் வருடா வருடம் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு அவரது வீட்டுக்குப் போய் பார்த்து விட்டு வருவாராம் ராமராஜன்.

Next Story