சிம்பு படத்தில் அந்த பாடல் ஹிட் ஆனதுக்கு காரணம் இவர்தான்! காதலர்கள் கொண்டாடும் பாடல்

by Rohini |
simbu
X

simbu

Actor Simbu: ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே போல் படத்தில் அமையும் பாடல்களும் மிக மிக முக்கியம். பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஓடியிருக்கின்றன. அந்த வகையில் சிம்பு நடித்த ஒரு படத்தில் அமைந்த பாடலை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக் கூடிய நடிகர் சிம்பு. கமல் புரடக்‌ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதையும் படிங்க: ராதிகாவுக்கு பில்டப் கொடுக்கும் ஈஸ்வரி… மட்டம் தட்டப்படும் பாக்கியா… என்னங்கப்பா இதெல்லாம்?

இந்த நிலையில் சிம்புவும் ஜோதிகாவும் நடித்த திரைப்படம் ‘சரவணா’. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருப்பார். சரவணா படத்தில் சிம்பு ஜோதிகாவின் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். கூடுதலாக படத்தில் அமைந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

குறிப்பாக ‘காதல் வந்தும் சொல்லாத’ என்ற பாடல் காதலர்கள் கொண்டாடிய பாடல். கதைப்படி ஹீரோ ஹீரோயின் ஒருவருக்கொருவர் காதலிக்க ஆனால் அந்த காதலை இருவருமே சொல்லாமல் மனதிற்குள் வைத்து படும் நேரத்தில் ஒலிக்கின்ற பாடலாக இது அமைந்திருக்கும். முதலில் இந்த பாடலை ஆண் குரலில் பாட வைப்பதா இல்லை பெண் குரலில் பாட வைப்பதா என்ற சந்தேகம் ரவிக்குமாருக்கு இந்திருக்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் முத்துவுக்கு தான் பிரச்னையா? ஸ்ருதி-ரவியை கூட்டிப்போக தயாராகும் அம்மா.. அப்பாடி!…

அதன் பிறகு தனது உதவி இயக்குனரான ஜீவா அழைத்து இரண்டு குரல்களிலும் தனித்தனியாக பாட வைத்து ரிக்கார்டு செய்ய சொல்லுமாறு ஸ்ரீகாந்த் தேவாவிடம் அனுப்பியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவும் அப்படியே செய்ய திடீரென உதவி இயக்குனர் ஜீவா ‘இரு குரல்களிலும் பாடல் அமைந்தால் எப்படி இருக்கும்’ என நினைத்து மூன்றாவதாக இரு குரலிலும் பாடுவதுமாதிரியும் ரிக்கார்டு செய்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின் மூன்று கேசட்களை ரவிக்குமார் கேட்க மூன்றாவதாக ரிக்கார்டு செய்த அந்த இரு குரலிலும் அமைந்த பாடல்தான் நன்றாக இருந்திருக்கிறது. உடனே ஸ்ரீகாந்த் தேவாவுக்கு போன் செய்து நன்றியை சொல்ல ‘எனக்கு சொல்லாதீங்க. இதை செய்ய சொன்னதே உங்க உதவி இயக்குனர்தான்’ என ஸ்ரீகாந்த் தேவா சொல்லியிருக்கிறார். அதன் பிறகு அவரை உள்ளே அழைத்த ரவிக்குமார் அனைவரையும் அவருக்கு கைதட்டுமாறு சொல்லி மனதார பாராட்டினார். அந்தப் பாடலை பாடியவர்கள் பிரசன்னா மற்றும் சைதன்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் எடுக்கும் கமல்?.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் பிரபலம்!..

Next Story