Cinema News
எக்ஸ் விட்டு ஓடியதுக்கு இதான் காரணமா? விக்னேஷ் சிவன் உருட்டிய பொய்.. அம்பலப்படுத்திய ரசிகர்கள்
Vignesh Shivan: இயக்குனரும், பிரபல நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் சொன்ன அப்பட்டமான பொய்யால் வகையாக ரசிகர்களிடம் சிக்கி விமர்சனங்களை குவித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் விக்னேஷ் சிவன். அதிலும் அவருடைய படங்களையும் பார்த்த ரசிகர்களை விட இன்ஸ்டா அவர் போடும் பதிவுகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் கூட தனுசை எதிர்த்து நயன்தாரா வெளியிட்ட கடிதத்தில் பிரபலங்கள் அவருக்கு வரவேற்பை கொடுத்தனர்.
ஆனால், ரசிகர்கள் தனுஷ் பக்கம் தான் நின்றனர். இது இந்த ஜோடிக்கு மேலும் பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. நயன்தாரா போல தனுசை விமர்சிக்கும் விதமாக விக்னேஷ் சிவனும் ஒரு பதிவை வெளியிட்டார். தனுஷ் அனுப்பிய நோட்டீஸை பதிவாக வெளியிட்டு அதில் அன்பாக இருங்கள் என அவர் பேசிய வீடியோவையும் இணைத்திருப்பார்.
பேன் இந்திய இயக்குனர்களின் ரவுண்ட் டேபிள்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேன் இந்திய இயக்குனர்களின் ரவுண்டு டேபிள் பேட்டியில் கலந்து கொண்டிருந்தார். இந்த பேட்டியில் மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, கபிர் கான், ரீமா காக்டி, வெங்கி அட்டுலுரி, ஸ்ரீஜித் முகர்ஜி, அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கலந்து கொண்டனர்.
பலமொழிகளில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் கலந்து கொண்ட இந்த பேட்டியில் கடந்த இரண்டு வருடங்களாக சினிமாவில் இயக்காத விக்னேஷ் சிவன் கலந்து கொண்டதற்கான காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த பேட்டியின் கமெண்ட்ஸ் செக்ஷனில் விக்னேஷ் சிவன் எதற்கு இங்கே இருக்கிறார் என பலரும் பதிவிட்டு வந்தனர்.
விக்னேஷ் சிவனின் பொய்
இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து விக்னேஷ் சிவன் நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் தற்போது ஒரு மிகப்பெரிய பொய் சொல்லி ரசிகர்களிடம் பெரிய அளவில் வசை வாங்கிக் கொண்டிருக்கிறார்.
என்னை அறிந்தால் படத்திற்கு நான் ஒரு பாடலை எழுதியிருந்தேன். அப்பொழுதுதான் நான் அஜித் சாரை ஒருமுறை அங்கு சந்தித்தேன். அப்பொழுது அஜித் சார் என்னிடம் நான் நிறைய படங்களை பார்க்க மாட்டேன். நானும் ரவுடிதான் திரைப்படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். எனக்கு பார்த்திபன் கேரக்டர் தான் ரொம்ப பிடித்திருக்கிறது. அதுபோல ஒரு கதையை தயார் செய்யுங்கள் நாம் இணைந்து பணி புரியலாம் என கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: குணா படத்தில் கவனிக்க மறந்த விஷயங்கள்… அந்த நடிகைக்குப் பிறகு தன்னைக் கருப்பாக்கிய கமல்
விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட சிக்கல்
இந்த பேட்டி வெளியான உடன் ரசிகர்கள் நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியானது 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். ஆனால் என்னை அறிந்தால் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே வெளியாகிவிட்டது. அப்பொழுது எப்படி அஜித் விக்னேஷ் சிவனிடம் இப்படி ஒரு விஷயத்தை சொல்லி இருக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் தன்னுடைய எக்ஸ் கணக்கை டிஆக்டிவேட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.