விஜயகாந்த் இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன் நடந்தது இதுதான்!.. உண்மையை சொன்ன பிரேமலதா..
Vijayakanth: தன்னுடைய கணவர் விஜயகாந்தின் கடைசி நிமிடங்களை கண்ணீருடன் பிரேமலதா சொல்லி கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதை கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி கவலைப்படாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரேமலதா கூறிய போது, வழக்கமான பரிசோதனைக்காக தான் நாங்க டிசம்பர் 25ந் தேதி மருத்துவமனை போக இருந்தோம். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையால் மியாட்டில் டாக்டர்கள் இருக்க மாட்டார்கள் என்றனர். 26ந் தேதி கூட்டிட்டு வர சொன்னார்கள்.
இதையும் படிங்க: பிக்பாஸில் மட்டும் இல்ல வெளியேவும் தக் லைஃப் செய்த போட்டியாளர்!… இவரும் பிரதீப்புக்கு தான் சப்போர்
ஆனால் எனக்கு 8 என்றால் பயம். அதனால் கிறிஸ்துமஸ் அன்றே கூட்டி சென்றேன். 2014ல் இருந்து நான் அவருடன் எத்தனை மருத்துவமனை அழைத்து சென்று இருந்தேன். அதனால் எப்போதும் போல நம்பிகையுடன் அவரை அழைத்து சென்றேன். என் வீட்டு பெண்களிடமும் கேப்டனுக்காக ஸ்பெஷல் உணவை செய்ய சொல்லி வந்தேன்.
26ந் தேதி அவருக்கு முறையான டெஸ்ட் எடுக்கப்பட்டது. கோவிட் இருப்பதால் அந்த டெஸ்ட்டும் எடுக்க வேண்டும் என்றனர். சரி எனக் கூறிவிட்டேன். அந்த ரிப்போர்ட்டில் பாசிட்டிவ் என வந்துவிட்டது. இதனால் அங்கு ரெண்டு நாட்கள் இருக்க வேண்டும் என்றனர். நானும் ஓகே சொல்லிவிட்டேன். 26, 27 கேப்டன் நல்ல நலத்துடன் இருந்தார்.
28 காலை 4 மணி முதல் அவருக்கு மூச்சு திணறல் தொடங்கியது. நான் அப்போதும் அவருக்கு தப்பாக நடக்கும் என நம்பவே இல்லை. அங்கிருந்த டாக்டர்கள் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்ல சொன்னார்கள். நாங்க இத்தனை வருடத்தில் இதை சொல்லி இருக்கோமா? கொஞ்சம் கஷ்டம் என்றனர். நான் என் தம்பி சுதீஷுக்கு கால் செய்தேன்.
இதையும் படிங்க: திருமுருகன் கூட வொர்க் பண்ணும் போது இந்த கஷ்டத்தை அனுபவிச்சேன்! நாதஸ்வரம் ஹீரோயின் பளீச்
பின்னரே என் மகன்களுக்கு கால் செய்து சொன்னேன். அடுத்து கட்சி நிர்வாகிகளுக்கும், கேப்டன் அக்கா, மாமாவுக்கு கால் செய்து சொன்னதாக கண்ணீருடன் சொல்லி இருக்கிறார். மேலும், உலக அளவில் இன்று மீடியா அவர் புகழை பரப்பி இருக்கிறார்கள். அதை அவர் உயிருடன் இருக்கும் போது செய்து இருந்தால் அவர் சந்தோஷப்பட்டு இருப்பாரே?
இனி இது தான் எங்க கோயில். கடைசி வரை இங்கு அன்னதானம் நடக்கும். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதான ட்ரஸ்ட் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கேப்டனுக்கு பின்னர் எங்க தலைமுறை கேப்டன் செய்ததை தொடர்ந்து செய்வார்கள் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: மௌனம் கலைத்த தளபதி!.. அரசியல் அறிவிப்பு எப்போ தெரியுமா?!.. லீக் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்..