நயன்தாரா திடீர் அறிக்கைக்கு பின்னால் இப்படி ஒரு திட்டமா? ஓ இதான் விஷயமா?

by Akhilan |   ( Updated:2024-11-16 22:30:51  )
நயன்தாரா திடீர் அறிக்கைக்கு பின்னால் இப்படி ஒரு திட்டமா? ஓ இதான் விஷயமா?
X

#image_title

Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய டாக்குமெண்ட்ரி வெளியாக இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இந்த திடீர் அறிக்கைக்கு பின்னால் இந்த திட்டத்தோடு இதை செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுடைய கல்யாண நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்தனர். இதற்கு பல கோடிகள் பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதற்காகவே கல்யாணத்தின் போது செய்தியாளர்கள் யாருக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க: விஜயை பார்த்து கத்துக்கோங்கப்பா! பாடாய்படும் கங்குவா.. வீர வசனம் பேசினா இப்படித்தான்

இரண்டு ஆண்டுகள் கழித்தும் இந்த டாக்குமெண்ட்ரி வெளியாகாமல் இருந்து வந்தது. சமீபத்தில் டாக்குமெண்ட்ரியின் டிரெய்லரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன் பிறந்தநாளான 18 நவம்பரில் வெளியிட திட்டமிட்டனர். அதன்படி டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் திடீரென நேற்று நயன் தரப்பு தனுஷுக்கு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டது. அதில் நானும் ரவுடித்தான் படத்தில் இருந்து 3 நொடி பிடிஎஸ் காட்சிகள் பயன்படுத்தி இருந்தோம். அதற்கு 10 கோடி இழப்பீடு கேட்பதாகவும், என்ஓசிக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருப்பதாகவும் நயன் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

ஆனால் அது மட்டுமல்லாமல் முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை தனுஷ் மீது துவேசத்தை கொட்ட விஷயம் பிரளயமாக வெடித்தது. ஒரு பக்கம் பிரபலங்கள் நயனுக்கு சப்போர்ட் செய்ய தமிழ் சினிமா ரசிகர்கள் தனுஷ் பக்கம் நின்றனர். மாறி மாறி சண்டை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா 3வது நாள் வசூலாவது சொல்ற மாதிரி இருந்ததா? தேறுமா, தேறாதா?

அதனால் இரண்டு நாட்கள் இருக்கும் போது தன்னுடைய டாக்குமெண்ட்ரிக்கு நல்ல புரோமோஷனை தேடி கொண்டார். அதுமட்டுமல்லாமல் திடீரென இன்று செய்தியாளர் கூட்டத்தையும் நயன் கூட்டி அங்கு அவர்களுக்கு ஸ்பெஷலாக ப்ரீவியூ காட்சியை திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதனால் தற்போது நாளை வெளியாகும் டாக்குமெண்ட்ரிக்கு நல்ல ரீச்சை கொடுக்கும் என்பதுதான் திட்டம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

Next Story