தளபதி சும்மா போகலை… கொடுத்த ஆர்டர் அப்படி.. அண்ணன் மேல பாசமெல்லாம் இல்லையோ…

Published on: August 21, 2024
---Advertisement---

GoatMovie: நடிகர் விஜயகாந்தின் இல்லத்திற்கு கோட் படக்குழு சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில், பிரபல திரை விமர்சகர் அந்தணன் இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய தகவல்களை தன்னுடைய சமீபத்திய வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டில் விஜயகாந்திற்கு நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய பெருமை எஸ் ஏ சந்திரசேகருக்கு தான் சேரும். அவர் இயக்கத்தில் 15-க்கும் அதிகமான சூப்பர் ஹிட் படங்களில் விஜயகாந்த் நடித்ததால் அவர் மீது அவருக்கு தனி பிரியம் உண்டு. இதனால் விஜயை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் கேட்டபோது உடனே ஓகே செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மகாராஜாவை மிஸ் பண்ணது இதனால்தான்.. ஒருவழியா விஷயத்தினை சொல்லிட்டாரு ஷாந்தனு..

அது மட்டுமல்லாமல் விஜயின் முதல் சினிமாப் பிரவேசம் கூட விஜயகாந்தின் இள வயது பருவ கேரக்டருக்காக வெற்றி திரைப்படத்தில் நடித்ததுதான். இதனால் விஜய் மற்றும் விஜயகாந்த் இருவருக்குமே அப்போதிலிருந்து ஒரு நெருங்கிய பந்தம் இருந்ததாகவே கூறப்படுகிறது.

இருந்தும் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபோது ஒருமுறை கூட விஜய் அவரை நேரில் வந்து பார்க்கவில்லை. இது குறித்து பலமுறை பலரும் கேள்வி எழுப்பிய போது கூட எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.  ஆனாலும், விஜயகாந்தின் இறப்பிற்கு ஷூட்டிங்கை விட்டு நடு இரவில் வந்து விஜய் சந்தித்ததும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.

இந்நிலையில் கோட் திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி இருக்கும் நிலையில் விஜயகாந்தின் இல்லத்திற்கு விஜய் சென்றதற்கு பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறதாம். கோட் திரைப்படத்தில் விஜயகாந்தின் ஏஐ உருவத்தை வைக்க படக்குழு முடிவு எடுத்தது.

இதையும் படிங்க: இவங்கள பாக்குறதுக்கு சும்மா இருக்கலாமே…பிக்பாஸ் சீசன் 8ல் மொத்தமா களமிறங்கும் விஜய் டீம்…

goat movie

அந்த வீடியோக்களை வைத்து தற்போது விஜயகாந்தின் ஏஐ உருவம் உருவாக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் விஜய் நேரில் வரவேண்டும் என பிரேமலதா விரும்பியதால் தான் இந்த சந்திப்பு நடந்ததாக  அந்தனன் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அப்போ கோட் விளம்பரத்திற்காக தான் விஜய் இவ்வாறு நடந்து கொண்டாரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.