இதுக்காக தான் இந்த டைட்டில்.. இனிமே எவனும் சொல்லவே கூடாது… உண்மையை சொன்ன வெங்கட் பிரபு..
Goat: தளபதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தின் டிரைலர் தான் தற்போதைய சமூக வலைதளத்தின் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் இருக்கு தற்போது காரணம் பலருக்கு தெரிந்து விட்டாலும் அதை வைக்க உண்மையான காரணம் ஒன்று இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை ரசிகர்கள் கோட் என அழைத்து வருகின்றனர். தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால்தான் வரிசலுகை உண்டு என தமிழ்நாடு அரசு உருவாக்கிய விதியால் இதுவரை தமிழ் பெயர்கள் மட்டுமே வைக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: என்னங்க அம்புட்டு பஞ்சமா? தங்கலான் படத்திலும் இதை செய்ய போறாங்களா?… விக்ரம் சொன்ன நியூஸ்…
ஆனால் சமீபகாலமாக அந்த விதியை கோலிவுட் உடைத்து உள்ளது. விஜய் தொடங்கி அஜீத், ரஜினிகாந்த் வரை அனைவருமே தங்களுடைய அடுத்த படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் தான் வைத்துள்ளனர். முதலில் ரசிகர்கள் தமிழை மதிக்காம நடந்து கொள்வதாக விமர்சனமும் செய்தனர்.
ஆனால், தேவையில்லாமல் இதற்கு இப்படி பெயர் வைக்கவில்லை அதன் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்தது. இந்நிலையில் கோட் டிரைலர் முதல் சில நொடிகளிலேயே விஜயை பற்றி பிரசாந்த் குறிப்பிடும் போது அவர் சாட்சின் கோட் என குறிப்பிட்டு இருப்பார். உளவு அமைப்பு போன்ற ஒரு நிறுவனத்தில் விஜய் சிறப்பாக பணியாற்றியதை குறிக்கவே அப்படி குறி்ப்பிடுவார்.
இதையும் படிங்க: டபுள் தளபதி சம்பவத்துக்கு ரெடியா? நீங்களே இப்படி இறங்கி வந்தா எப்படி? பெரிய இடமே சொல்லியாச்சு…
ஆனால் இப்படத்திற்கு நிறைய தமிழ் பெயர்களை யோசித்தோம். அது எதுவுமே படத்திற்கு ஒத்துப் போகவில்லை. இந்த பெயர் மட்டுமே படத்திற்கு சரியாக அமைந்தது. அதனால் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைத்தோம். இனிமேல் இந்த பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும் இந்த பெயரை நாங்கள் முடிவு செய்தோம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.