More
Categories: Cinema News latest news

அடுத்த சம்பவத்துக்கு ரெடி… தளபதி69 படத்தினை இயக்க இருப்பது இந்த இயக்குனர் தானா..!

Thalapathy69: விஜய் நடிப்பில் தற்போது 68வது படத்தினை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் விஜய் முடித்து விட்டு அடுத்த நடிக்க இருக்கும் படத்தின் இயக்குனர் யார் என்ற விஷயம் தற்போது கசிந்துள்ளது.

பீஸ்ட் தோல்வியை தொடர்ந்து விஜயின் கேரியரில் பெரிதும் எதிர்பார்த்த படம் லியோ. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய தொய்வை சந்தித்ததாக சில விமர்சனங்கள் எழுந்தது. படத்தின் வசூல் கூட அதளபாதாளத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னய்யா நடக்குது? இங்க அடிச்சிட்டு இருக்காங்க – ரஜினி ரசிகனா விஜய் செய்த காரியத்தை பாருங்க

ஆனால் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்து இருக்கும் வசூல் தொகை மிகப்பெரிய அளவிலேயே இருக்கிறது. இதையெல்லாம் கண்டுக்காத விஜய் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கி இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படம் டைம் டிராவலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அல்ட்ரா லெவலில் விஎஃப்எக்ஸ் பணிகள் செய்து விஜயை இளமையாக காட்டும் பணிகள் தான் முதலில் நடந்தது. இந்த படத்தின் கேஸ்டிங்கும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: செழியனிடம் சைக்கோவாக மாறிய மாலினி… ஆனா கடுப்பாகுறது என்னவோ ரசிகர்கள் தான் ஜி..!

இப்படத்தினை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தினை இயக்குனர் சங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 12 வருடங்கள் கழித்து ஹிட் படமான நண்பனுக்கு பின்னர் இருவரும் இணைய இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் இருக்கிறது.

ராம்சரணை இயக்க தெலுங்கு பக்கம் போன சங்கர் மீண்டும் தமிழுக்கு வர பெரிய நடிகர்கள் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் சமீபத்தில் விஜயை பார்த்து கதை சொன்னதாகவும் அதை அடுத்தே இந்த கூட்டணி உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts