Categories: Cinema History Cinema News latest news

கல்லை தண்ணில போடலாமா? மீனு செத்துருமே… இதற்கா வரி விலக்கு மறுப்பாங்க… அதுவும் பிரபல நடிகருக்கு!..

Kollywood Movie: தமிழ் சினிமாவில் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு தரப்படும். ஆனால் அதில் நடந்த பித்தாலாட்டம் தான் அதிகமாம். ஒரு பிரபல நடிகரின் படத்துக்கு வரி விலக்கு கொடுக்கப்படாததுக்கு சொன்ன குபீர் காரணமும் தற்போது கசிந்து இருக்கிறது.

2006ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஆங்கில பெயர்களில் கோலிவுட் படங்கள் வெளிவந்தது. அதை தடுக்க அவர்கள் போட்ட கடிவாளம் தான். தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு தரப்படும் என்பது. இதை தொடர்ந்து அன்றைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு இருந்த படங்கள் தமிழில் பெயர் மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: காதலியும், மனைவியும்… காதலுக்கு மரியாதை கிளைமேக்ஸில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா!..

ரஜினியின் ரோபோ படம் எந்திரன் என மாற்றப்பட்டது. ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கு சம்திங் சம்திங் என்ற படம் உனக்கும் எனக்கும் என மாற்றப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவின் பிஎஃப் படம் கூட அன்பே ஆருயிரே என மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட கலைஞர் ஆட்சியில் இருந்த அந்த 5 ஆண்டுகளும் பிற மொழியில் பெயர் வைக்கப்பட்ட தமிழ் படங்களே இல்லை.

இதையடுத்து, 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தனர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த விதியில் மாற்றம் கொண்டு வந்தார். தமிழில் பெயர் வைத்து இருந்தால் மட்டும் போதாது. யூ சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். வன்முறை காட்சிகள் இருக்க கூடாது. ஆபாச காட்சிகள் இருக்க கூடாது என அறிவித்தார். இதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்த நடிப்பை ஊர் நம்பாதுடா.. செருப்பால் அடிக்கும் போட்டோவை போட்டு நடிகர்களை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை!

அப்புறம் ஏன் வரிவிலக்கு இல்லை என விசாரித்த போது ஒரு காட்சியில் உதயநிதி ஸ்டாலின் கவலையாக குளத்து கரையில் உட்கார்ந்து கல்லை விட்டு எறிவாராம். குளத்தில் அந்த கல் விழும். அப்போ உள்ளே எத்தனை மீன்கள் இருக்கும். இந்த கல்லால் அது செத்து இருக்கும் என காரணம் சொன்னார்களாம். இதெல்லாம் காரணமா என பிரபலதிரை விமர்சகர் பிஸ்மி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Akhilan