Vijay: விஜயோட குணம் என்னன்னு தெரியுமா? போற போக்கப் பார்த்தா அவரு தான் அடுத்த ‘சிஎம்’ போல..!

Published on: November 9, 2024
vijay
---Advertisement---

சினிமாவில் ஆரம்பத்தில் எத்தனையோ அவமானங்களைப் பட்டு படிப்படியாகத் தனது உழைப்பால் முன்னுக்கு வந்தவர் தான் விஜய். நல்ல பேக்ரவுண்டு அதனால தான் விஜய் ஜெயிச்சாருன்னு சொல்வாங்க. அப்பா சந்திரசேகர் பிரபல இயக்குனர் தான்.

இருந்தாலும் அவர் ஆரம்பத்தில் விஜயை அறிமுகப்படுத்தும்போது விஜயைப் பலரும் இவரெல்லாம் ஹீரோவான்னு சொன்னாங்களாம். ஆனால் அதை எல்லாம் பெரிய பொருட்டாகக் கருதாமல் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தார்.

Also Read: Kamal Vs Rajni: கமல் இப்படியா செஞ்சாரு? ரஜினிக்கு எவ்வளவு அவமானம்னு பாருங்க..!

விஜயகாந்துடன் இணைத்து விஜயை செந்தூரப்பாண்டியில் நடிக்க வைத்தார் சந்திரசேகர். அதன்பிறகு அவருக்கு என்று ஒரு மார்க்கெட் வந்தது. இருந்தாலும் தனது தனிப்பட்ட திறமையையும் வளர்த்துக் கொண்டார். அவராகவே சொந்தமாகப் பாட ஆரம்பித்தார். நன்றாக நடனம் ஆடக் கற்றுக்கொண்டார்.

 ரஜினிக்கு இணையாக சம்பளம்

அப்புறம் ஆக்ஷன் காட்சிகளில் நல்லா பைட் போடவும் கற்றுக்கொண்டார். டயலாக் பேசுவதிலும் தனக்கென தனி பாணியைக் கடைபிடித்தார். அப்படியே அவர் வெறும் பேக்ரவுண்டை மட்டும் நம்பாமல் தனது திறமையையும் வளர்த்துக் கொண்டதால் தான் அவர் இந்தளவுக்கு வளர முடிந்தது. இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இணையாக 200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொன்ன ரஜினியே ஒரு கட்டத்தில் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பின்வாங்கினார். ஆனால் விஜய் அப்படி அல்ல. நல்ல பீக்கில் இருக்கும்போதே அரசியலுக்குள் முழுநேரமாக வருகிறேன். தனது 69வது படம் தான் கடைசி என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

2026ல் சிஎம்

vijay
vijay

அவர் சொன்னது போலவே தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, கொடியையும் அறிமுகப்படுத்தி விட்டார். தொடர்ந்து தனது முதல் மாநில மாநாட்டையும் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார்.

அவருக்கு எத்தனையோ விமர்சனங்கள் வரத்தான் செய்தன. எதையும் காதில் வாங்காமல் கட்சியின் 26 தீர்மானங்களை அறிவித்தார். தனது இலக்கு 2026ல் சிஎம் என்பது தான். அதையே குறிக்கோளாகக் கொண்டு பல நடவடிக்கைகளைக் கட்சி ரீதியாக எடுத்து வருகிறார். நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் விஜயின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தார்.

சீமானுக்கு வாழ்த்து

ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத விஜய் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரையே ஆச்சரியப்பட வைத்துவிட்டார். கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தது பல கட்சிகளுக்குக் கலக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்தநிலையில் அவரது அம்மா ஷோபாசந்திரசேகர் விஜயைப் பற்றிய ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

 விஜயோட குணம்

Also Read: Vijayakanth: கேப்டனை கொண்டாடுறதுக்கு இதுதான் காரணம்.. அவர் நடிச்ச இத்தனை படங்களில் மாறாத ஒன்னு

விஜய் டாக்டராகணும்னு சொல்லி அவரை டாக்டர், டாக்டர்னு சொன்னோம். ஆனா, அவரு ஆக்டர், ஆக்டர்னு சொல்லி நடிகராகிட்டாரு. இப்ப வேற ஒரு பரிமாணம் எடுத்திருக்காரு. சின்ன வயசுல இருந்தே விஜய் என்ன நினைப்பாரோ அதை தான் செய்வார். நினைச்சதை செஞ்சி முடிக்காம விட மாட்டார். அது தான் விஜயோட குணம் என்கிறார் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது 2026ல் விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வர் ஆனாலும் ஆச்சரியமில்லை.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.