ரிலீஸாகி ஒரு வாரம் கழிச்சி டேக்ஆப்!.. வசூலில் தெறிக்கவிட்ட 3 படங்கள்!.. பட்டையை கிளப்பிய கைதி!..

by சிவா |
kaithi
X

kaithi

சில திரைப்படங்கள் உருவாகும்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் அது பெரிய நடிகர்களின் படங்களில் நடக்கும். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு புரமோஷனே தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கான ரசிகர் கூட்டம் அதிகம். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் படம் தொடர்பான எல்லா அப்டேட்டையும் கையில் வைத்திருப்பார்கள்.

அந்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், பாடல், டீசர், டிரெய்லர் என எல்லாமே பல லட்சம் பேர் பார்ப்பார்கள். டிவிட்டரில் அந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கும். படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருப்பார்கள். முதல்நாள் முதல் காட்சி அல்லது சிறப்பு காட்சிக்கு சில ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்குவார்கள்.

அப்படி வெளியான எல்லாமே படங்களுமே வசூலை அள்ளியது என சொல்ல முடியாது. அப்படி வெளியாகி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன படங்கள் நிறைய உண்டு. அதேபோல், படம் வெளியான நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற நல்ல வசூலை பெற்ற படங்களும் உண்டு. ஒருபக்கம், படம் வெளியாகி பெரிதாக பேசப்படாமல் ஒரு வாரம் கழித்து டேக் ஆப் ஆகி நல்ல வசூலை பெற்ற படங்களும் உண்டு. அப்படி ஹிட் அடித்த 3 படங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

இயக்குனர் பாலா இயக்கிய முதல் படம் சேது. விக்ரமுக்கு வாழ்க்கையை கொடுத்த படம் இது. அதற்கு முன் அவரின் நடிப்பில் வெளியான படங்கள் ஓடவில்லை. சேது படம் உருவாகி வினியோகஸ்தர்களால் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் தயாரிப்பாளரே சொந்தமாக தியேட்டரில் வெளியிட்டார். முதல் வாரம் தியேட்டரில் கூட்டம் இல்லை. அதன்பின் ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துப்போய் நல்ல வசூலைப்பெற்றதோடு சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது.

Ratchasan

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவான 96 படம் வெளியான போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ராட்சசன் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. எல்லோரும் 96 படத்தை பற்றியே பேசியதால் ராட்சசன் படத்திற்கு ஓப்பனிங் இல்லை. ஆனால், ராட்சசன் படம் பார்த்தவர்கள் சமூகவலைத்தளங்களில் இப்படத்தை பாராட்ட அப்படியே தியேட்டரில் கூட்டம் அதிகரித்தது. முடிவில் இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த சைக்கோ இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக ராட்சசன் இருக்கிறது.

விஜய் நடிப்பில் பிகில் படம் வெளியானபோது கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய 2வது படம் இது. பெரும்பாலான தியேட்டர்களில் பிகில் படம் திரையிடப்பட்டதால் துவக்கத்தில் கைதி படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால், படம் நன்றாக இருப்பதாக செய்திகள் பரவி ஒரு வாரத்தில் கைதி படம் டேக் ஆப் ஆகி 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.

Next Story